19 கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்தை வழங்கியது யுஜிசி

இந்தியா முழுவதும் 100 ஆண்டுகளுக்கும் மேலான கல்லூரிகளை தேர்வு செய்து அவற்றுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கி அதன் வளர்ச்சி மற்றும் கல்வித் தர மேம்பாட்டுக்கு சிறப்பு நிதி உதவி செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி உட்பட 19 கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும். இதைக்கொண்டு கட்டடங்களை புனரமைக்கும் பணி மேற்கொள்வதுடன், பாரம்பரியம் தொடர்பான சிறப்பு பாடத் திட்டங்களையும் தொடங்கலாம்.

பாரம்பரிய அந்தஸ்து பெற்ற 19 கல்லூரிகள் – 1. செயின்ட் ஜோசப் கல்லூரி (திருச்சி), 2. செயின்ட் சேவியர் கல்லூரி (மும்பை), 3. சிஎம்எஸ் கல்லூரி (கோட்டயம்), 4. கல்சா கல்லூரி (அமிர்தசரஸ்), 5. செயின்ட் பீடீஸ் கல்லூரி (சிம்லா), 6. கிறிஸ்து சர்ச் கல்லூரி (கான்பூர்), 7. பழைய ஆக்ரா கல்லூரி (ஆக்ரா), 8. மீரட் கல்லூரி (மீரட்), 9. லான்காட் சிங் கல்லூரி முசாபர்பூர் (பீகார்), 10. பிரீனன் அரசு கல்லூரி (கேரளா), 11. பல்கலைக்கழக கல்லூரி (மங்களூர்), 12. காட்டன் கல்லூரி (கவுகாத்தி), 13. மிட்னபூர் கல்லூரி (மேற்குவங்கம்), 14. மருத்துவ அறிவியல் கல்லூரி (ஜபல்பூர்), 15. டெக்கான் கல்விக்கழகத்தின் பெர்குசன் கல்லூரி (பூனா), 16. ஹிஸ்லாப் கல்லூரி (நாக்பூர்), 17. காந்தி நினைவு அறிவியல் அரசு கல்லூரி (ஜம்மு), 18. கன்யா மகாவித்யாலயா (ஜலந்தர்), 19. செயின்ட் சேவியர் கல்லூரி (கொல்கத்தா).

Leave a Reply