ரசகுல்லாவை அறிமுகப்படுத்திய நோபின் சந்திரதாஸ் சிறப்பு தபால்உறை வெளியீடு

கடந்த 1868ஆம் ஆண்டு ரசகுல்லாவை அறிமுகப்படுத்திய மேற்குவங்க மாநில இனிப்பு வியாபாரி நோபின் சந்திரதாஸ் நினைவாக சிறப்பு தபால் உறை வெளியிட தபால்துறை திட்டமிட்டுள்ளது. ரசகுல்லா கண்டுபிடிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 2017 நவம்பரில் ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசிய சுகாதாரக் குறியீடு – கேரளா முதலிடம்

தேசிய சுகாதார குறியீட்டை ‘நிதி ஆயோக்’ அமைப்பு தயாரித்துள்ளது. இதனை நிதி ஆயோக் துணைத் தலைவர் அமிதாப் காந்த் அவர்கள் டெல்லியில் பிப். 10ஆம் தேதி வெளியிட்டார். பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்று 3 வகைகளாக பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
பெரிய மாநிலங்கள் வரிசையில் – கேரளா முதலிடம் பிடித்தது. பஞ்சாப், தமிழ்நாடு முறையே 2 மற்றும் 3வது இடம் பிடித்தன. குஜராத், இமாசலப்பிரதேசம், மகாராஷ்டிரா, காஷ்மீர், ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம், தெலங்கானா, சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தரகண்ட், அசாம், மத்தியப்பிரதேசம், ஒடிசா, பீஹார், ராஜஸ்தான், உ.பி., ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த ஓராண்டில் சுகாதாரத் துறையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசையில் ஜார்கண்ட், காஷ்மீர், உத்தரப்பிரதேசம் முதல் மூன்று இடங்களை பிடித்தன.
சிறிய மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் – மிசோரம் முதலிடம் பிடித்தது. கடந்த ஓராண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் மணிப்பூர், கோவா இடம் பிடித்தன.
யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் – லட்சத்தீவு முதலிடம் பிடித்தது. சண்டிகர், டெல்லி, அந்தமான்-நிகோபர், புதுச்சேரி, டாமன்-டையூ, நாகர் ஹவேலி முறையே அடுத்தடுத்த இடங்கள் பிடித்தன.

ஆந்திராவிற்கு ரூ.1269 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

ஆந்திராவின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பிப். 10ஆம் தேதி ரூ.1,269 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் போலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.417.44 கோடியும், மாநில பிரிவினை வருவாய் பற்றாக்குறை மானியத்தின் கீழ் ரூ.369.16 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியமாக ரூ.253.74 கோடியும், அங்கன்வாடி சேவை திட்டம் மற்றும் துணை ஊட்டச்சத்து திட்டத்திற்காக ரூ.196.92 கோடியும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்காக ரூ.31.76 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. (ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசக் கட்சி எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது).

வடகொரியா-தென்கொரியா இடையே திடீர் நட்புறவு

தென்கொரியாவில் பிப். 9ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக வடகொரியா தென்கொரியாவிற்கு விருப்பம் தெரிவித்தது. தென்கொரியா அரசு இதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜிங் யுன்னின் சகோதரி கிம் யோ ஜங் அவர்கள் தென்கொரியாவிற்கு சென்றார். கொரியா போர் முடிந்து 74 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரிய அதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தென்கொரியா சென்றது இதுவே முதல் முறையாகும். குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜங் அவர்களுக்கு ராஜமரியாதை அளித்து வரவேற்றார். அவருடனும், வடகொரிய குழுவுக்கு தலைமையேற்று வந்துள்ள கிம் யங் நம்-முடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வடகொரிய அதிபர் கொடுத்தனுப்பிய கடிதத்தை தென்கொரிய அதிபரிடம் கிம் யோ ஜங் அவர்கள் அளித்தார். அதில், கொரிய நாடுகளின் உறவை பலப்படுத்த அதிபர் யுன் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், தன் நாட்டிற்கு வருகை தரும்படி தென்கொரிய அதிபர் மூன் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றார்.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை – முதன்முதலாக கேரளாவில்

மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை பிப். 8ஆம் தேதி இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் 5 டவர்களில் தொடங்கியது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உடும்பன்சோலை, உடும்பன் சோலை டவுன், கல்லுபாலம், செம்மண்ணார், மற்றும் சேனாபதி ஆகிய 5 டவர்களில் 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தனியார் செல்போன் நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி சேவையை தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளுக்கிடையிலான தேசிய விளையாட்டு போட்டிகள் – ஹரியானா சாம்பியன்

இளம் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ‘கேலோ இந்தியா’ என்ற பெயரில் முதன்முறையாக பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நடைபெற்றன. ஜனவரி 31ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் பளுதூக்குதல், ஹாக்கி, வில்வித்தை, கால்பந்து, ஜூடோ, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, கோகோ, டென்னிஸ், குத்துச்சண்டை என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநிலங்கள் (29), யூனியன் பிரதேசங்கள் (7) என மொத்தம் 35 மாநிலங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இத்தொடர் பிப். 8ஆம் தேதி நிறைவுபெற்றது. இத்தொடரின் இறுதியில் 38 தங்கம், 26 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்களுடன் ஹரியானா சாம்பியன் ஆனது. மகாராஷ்டிரா (36-32-43=111), டெல்லி (25-29-40 = 94), கர்நாடகா (16-11-17 = 44) முறையே 2, 3 மற்றும் 4வது இடம் பிடித்தன. மணிப்பூர், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் முறையே 5 முதல் 10 இடங்களை பிடித்தன. தமிழ்நாடு – 5 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்கள் வென்றது.

ஐசிசி இயக்குநராக பெப்சி செயல் அதிகாரி இந்திரா நூயி நியமனம்

பெப்சி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முதல் தன்னாட்சி பெண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2018 ஜூன் மாதம் முதல் இப்பொறுப்பை வகிப்பார் என ஐசிசி அறிவித்துள்ளது. (முன்னதாக ஐசிசி-யில் தன்னாட்சி இயக்குநர் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அந்த பொறுப்பை வகிப்பவர் பெண்ணாக இருக்க வேண்டும் என 2017 ஜூன் மாதம் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது)

நிதிக்கொள்கை – ரிசர்வ் வங்கி வெளியீடு

ரிசர்வ் வங்கி பிப். 7ஆம் தேதி நிதிக்கொள்கை வெளியிட்டது. அதில் ரிசர்வ் வங்கி, வங்கி களுக்கு அளிக்கும் கடனுக்கான ரிவெர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக நீடிக்கும். சில்லரை பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் (2017-18) 4வது காலாண்டில் 5.1 சதவீதம், மேலும் 2018-19ஆம் நிதியாண்டில் 5.1 – 5.6 சதவீதமாக இருக்கும். அக்.-மார்ச் வரையிலான அரையாண்டில் சில்லரை பணவீக்க விகிதம் 4.5 – 4.6 சதவீதமாக குறையும். மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 6.6 சதவீதம், வரும் நிதியாண்டில், 7.2 சதவீதமாக இருக்கும். முதலீடுகள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தோன்றி உள்ளன. மறு பங்கு மூலதன திட்டம், நிறுவன திவால் சட்டம் ஆகியவற்றால், வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிக்கும்.

6000 கி.மீ.-க்கு ரயில் பாதைகள் மின்மயமாக்கம் – தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்காக ரூ.2,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓசூர்-பெங்களூரு இடையிலான 48 கி.மீ. தூர இரட்டை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வழித்தடத்தில் அதிகமான ரயில்கள் இயக்க வழிவகை ஏற்படும். மேலும் கரூர்-சேலம் புதுப் பாதைக்கு ரூ.5 கோடி, திண்டிவனம்-செஞ்சி- திருவண்ணாமலை புதுபாதைக்கு ரூ.10 கோடி , திண்டிவனம்-நகரி பாதைக்கு ரூ.
10 கோடி, ஈரோடு-பழனி பாதைக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 6000 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதைகள் மின்மயமாக்க 2018-19 பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 319 கி.மீ. தூரம் உள்ள ரயில்பாதைகள் மின்மயமாக்கப்படும். மேலும் தமிழகத்திற்கு தற்போது 3198 கி.மீ., தூரத்திற்கு ரூ.20,064 கோடி மதிப்பிலான 27 ரயில்வே திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் அதிக பட்சமாக உத்தரப்பிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,685 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்தியப் பிரதேசம்- ரூ.6,359 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் மட்டுமே ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜ ஆட்சி அல்லாத மேற்குவங்கம், கேரளா, டெல்லி ஆகிய ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2017-18 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த தொகையை விட முறையே 14, 23, 40 சதவீதம் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 2017-18 பட்ஜெட்டில் ரூ.2,287 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி விவரம் – 1.புதிய பாதை – ரூ.159 கோடி 2.அகல ரயில் பாதை – ரூ.239 கோடி 3.இரட்டை ரயில் பாதை – ரூ.55 கோடி 4.ரயில் பாலத்திற்கு கீழ் ரோடு – ரூ.456 கோடி 5.ரயில் பாதை புதுப்பிப்பு – ரூ.960 கோடி 6.பாலங்கள் கட்டுமானம் – ரூ.66 கோடி சிக்னல், 7.தொலைத்தொடர்பு – ரூ.114 கோடி 8. கம்ப்யூட்டர் மயமாக்கல் – ரூ.6 கோடி 9.இதர எலக்ட்ரிக்கல் பணி – ரூ.53 கோடி 10.பணிமனை – ரூ.50 கோடி.

மின்மயமாக்கம் – தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்காக ரூ.2,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓசூர்-பெங்களூரு இடையிலான 48 கி.மீ. தூர இரட்டை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வழித்தடத்தில் அதிகமான ரயில்கள் இயக்க வழிவகை ஏற்படும். மேலும் கரூர்-சேலம் புதுப் பாதைக்கு ரூ.5 கோடி, திண்டிவனம்-செஞ்சி- திருவண்ணாமலை புது பாதைக்கு ரூ.10 கோடி , திண்டிவனம்-நகரி பாதைக்கு ரூ.10 கோடி, ஈரோடு-பழனி பாதைக்கு
ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 6000 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதைகள் மின்மயமாக்க 2018-19 பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 319 கி.மீ. தூரம் உள்ள ரயில்பாதைகள் மின்மயமாக்கப்படும். மேலும் தமிழகத்திற்கு தற்போது 3198 கி.மீ., தூரத்திற்கு ரூ.20,064 கோடி மதிப்பிலான 27 ரயில்வே திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் அதிக பட்சமாக உத்தரப்பிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,685 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்தியப் பிரதேசம்- ரூ.6,359 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் மட்டுமே ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜ ஆட்சி அல்லாத மேற்குவங்கம், கேரளா, டெல்லி ஆகிய ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2017-18 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த தொகையை விட முறையே 14, 23, 40 சதவீதம் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 2017-18 பட்ஜெட்டில் 2,287 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி விவரம் – புதிய பாதை – ரூ.159 கோடி அகல ரயில் பாதை – ரூ.239 கோடி இரட்டை ரயில் பாதை – ரூ.55 கோடி ரயில் பாலத்திற்கு கீழ் ரோடு – ரூ.456 கோடி ரயில் பாதை புதுப்பிப்பு – ரூ.960 கோடி பாலங்கள் கட்டுமானம் – ரூ.66 கோடி சிக்னல், தொலைத்தொடர்பு – ரூ.114 கோடி கம்ப்யூட்டர் மயமாக்கல் – ரூ.6 கோடி இதர எலக்ட்ரிக்கல் பணி – ரூ.53 கோடி பணிமனை – ரூ.50 கோடி.

நெசவாளர் தேசிய விருது

2015ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 2015 முதல் சிறந்த நெசவாளர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் பிப். 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
சிறந்த ஆடை வடிமைப்பு-க்கான தேசிய விருது – காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த கே. மகேஸ்வரி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த வடிவமைப்புக்கான தேசிய தரச்சான்றிதழ் விருதுக்கு – தேர்ந்தெக்கப்பட்டவர்களில், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த பி. பார்வதி மற்றும் காஞ்சிபுரம் தனியார் நெசவாளர் ஆர். வரதன் ஆகிய இருவரும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய விருது – முதன்முறையாக கைத்தறி துணை விற்பனைக்கான தேசிய விருதுக்கு காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கைத்தறி துணி விற்பனை தேசிய தரச்சான்றிதழ் விருதுக்கு – காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம்

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அவர்கள் பிப். 5ஆம் தேதி திடீரென அவசர நிலையை பிரகடனம் செய்தார். 15 நாட்களுக்கு இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அரசின் முழு கட்டுப்பாடு அதிபர் வசம் வந்துள்ளது. (மாலத்தீவு உச்சநீதிமன்றம் சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்யுமாறு அதிபருக்கு உத்தரவிட்டும், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவியை ரத்து செய்தும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது)

யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – 4வது முறையாக கோப்பை வென்று இந்தியா சாதனை

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப். 3ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில் மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இந்தியா அணி காலிறுதியில் வங்கதேசத்தையும், அரையிறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. ஆஸ்திரேலியா-இந்தியா இடையே பிப். 3ஆம் தேதி நியூசிலாந்தின் மவுன்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் 4வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிக்கனியை எட்டியது. இதில் டெல்லி வீரர் மனிஜோத் கல்ரா 102 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். கேப்டன் பிருத்விஷா 29 ரன் அடித்தார். ஆட்ட நாயகன் மன்ஜோத் கல்ரா. தொடர் நாயகனாக 6 ஆட்டங்களில் 3 அரை சதங்கள், ஒரு சதம் என 372 ரன்கள் குவித்த கப்மன்கில் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி கோப்பை வென்றதை அடுத்து பயிற்சியாளர் ராகுல் திராவிட் அவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும், அணியின் வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.30 லட்சமும், அணியின் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தலா
ரூ.20 லட்சமும் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 30ஆம் தேதி நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா. (இந்தியா-272/9 – கப்மன்கில் 94 பந்தில் 102 ரன் அடித்தார், பாக்.-69).
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவிருந்த 3வது இடத்திற்கான போட்டியில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் 3வது இடம் பிடித்தது.
உலக சாதனை – ஜன. 23ஆம் தேதி குயின்ஸ்டவுன் ஜான் டேவிஸ் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையே நடைபெற்ற முதல் காலிறுதியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸி. 127 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 47 ரன்களுக்குள் சுருண்டது. இதில் ஆஸி. வீரர் லாயிட் போப் 9.4 ஓவர் வீசி 2 மெய்டன் உட்பட 35 ரன் மட்டுமே விட்டுகொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி யு-19 உலகக்கோப்பை வரலாற்றில் சாதனை படைத்தார். சாம்பியன்கள் – 1998-ஆஸ்திரேலியா (2வது இடம் பாகிஸ்தான்), 1998-இங்கிலாந்து (நியூசிலாந்து), 2000-இந்தியா (இலங்கை), 2002-ஆஸ்திரேலியா (தெஆ), 2004-பாகிஸ்தான் (மேஇ), 2006- பாகிஸ்தான் (இந்தியா), 2008-இந்தியா (தென்னாப்பிரிக்கா), 2010-ஆஸ்திரேலியா (பாகிஸ்தான்), 2012-இந்தியா (ஆஸ்திரேலியா), 2014-தென்னாப்பிரிக்கா (பாகிஸ்தான்), 2016-மேஇ (இந்தியா), 2018-இந்தியா (ஆஸ்திரேலியா).

இ-வே பில் அமல் திடீர் நிறுத்தம்

13 மாநிலங்களில் இ-வே பில் பிப். 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் சரக்கு வாகனங்களே இ-வே பில்லுடன் இருந்தன. 80 சதவீதம் பேருக்கு வெப்சைட்டுக்குள் செல்ல இயலவில்லை. இதைத் தொடர்ந்து இ-வே பில் நடைமுறை சர்வர் முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

ராஜஸ்தானில் ஆல்வார், ஆஜ்மீர் மக்களவை தொகுதி மற்றும் மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக-விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் மேற்குவங்கத்தில் உலுபெரியா மக்களவை மற்றும் நோபாரா சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா ஓபன் பேட்மின்டன் – சிந்து வெள்ளி வென்றார்

டெல்லியில் பிப். 4ஆம் தேதி நடைபெற்ற இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்கா வீராங்கனை பெய்வன் ஸாங்கிடம் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளி வென்றார். உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள பெய்வன் ஸாங் வெல்லும் முதலாவது பெரிய பட்டம் இதுவாகும்.

சர்க்காரியா கமிஷன் ஒரு சூழ்ச்சி வலை – நூல் வெளியீட்டு விழா

‘முரசொலி செல்வம் அவர்கள் எழுதிய சர்க்காரியா கமிஷன் ஒரு சூழ்ச்சி வலை’ என்னும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப். 2ஆம் தேதி நடைபெற்றது. நூலை திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட, முதல் பிரதியை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மத்திய பட்ஜெட் 2018-19

நடப்பு 2018-19ஆம் நிதியாண்டிற்கான பொதுபட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் பிப். 1ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார் (பொது பட்ஜெட் பாஜக அரசு தாக்கல் செய்யும் முழு அளவிலான கடைசி பட்ஜெட் இதுவாகும். 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்த நிதியாண்டிற்கு செலவு அனுமதி கோரிக்கை (வோட் ஆன் அக்கவுண்ட்) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1.38 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. நிரந்தர வரிக்கழிவு சலுகை ரூ. 40 ஆயிரம் வரை அளித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு மீதான வட்டிக்கு விதிக்கப்படும் வரிவிலக்கு ரூ.50 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது. செல்போன், கைக்கடிகாரம், ஆட்டோமொபைல், டிரக் மற்றும் பஸ் டயர், காலணி, வைரம், சமையல் எண்ணெய், பழச்சாறு உள்ளிட்ட பல பொருட்களுக்கு சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட கால மூலதன ஆதாய வரி 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் ஒதுக்கீடு காரணமாக வரும் நிதியாண்டில் (2018-19) நாட்டின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.3 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும். அதேநேரம் 3 சதவீத அளவுக்கு குறைக்கப்படும் என்ற முந்தைய இலக்கு எட்டமுடியாமல் போனது. விவசாயம், கிராமப்புற வீட்டு வசதி திட்டம், ஆர்கானிக் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக உற்பத்தி விலையில் 1.5 மடங்கு அளிக்கப்படும். இது இந்த ஆண்டு குறுவை சாகுபடி பயிர்களுக்கும் பொருந்தும். வேளாண் கடனுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் சந்தை மேம்பாட்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. ரூ.100 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளும் வேளாண்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ராணுவத்திற்கான ஒதுக்கீடு 7.81 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ரூ.2.74 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.95 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்ஜெட் செலவு 2018-19ஆம் ஆண்டில் ரூ.24.42 லட்சம் கோடியாக இருக்கும் என்றும், ரயில்வே துறைக்கான செலவு ரூ.1.48 லட்சம் கோடி என்றும் தெரிவித்தார். 110 நிமிட பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஜெட்லி அவர்கள், ஹிந்தி, ஆங்கிலம் என மாறி மாறி பேசினார். 2015-16ம் நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 262.39 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2016-17ஆம் நிதியாண்டில் 264.64 பில்லியன் டாலராக வளர்ச்சி அடைந்தது. இது 2017-18ஆம் நிதியாண்டில் 15 சதவீதம் அதிகரிக்கும். நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும்.

1947ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை 87 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு வரை 25 நிதியமைச்சர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் மொரார்ஜி தேசாய், சரண்சிங், வி.பி. சிங், மன்மோகன்சிங் ஆகிய 4 பேரும் நிதியமைச்சர்களாக இருந்து பின்பு பிரதமராகி உள்ளனர். மத்திய நிதியமைச்சராக பதவி வகித்த ஆர். வெங்கட்ராமன், பிரணாப் முகர்ஜி இருவரும் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர். நிதியமைச்சராக இருந்தவர்களில் இந்திரா காந்தி (1970), ஹேவதி நந்தன் பகுகுணா (1979 ஜூலை – 1980 ஜனவரி) ஆகிய இருவர் மட்டுமே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது இல்லை. நேரு, இந்திரா, ராஜிவ்காந்தி ஆகிய மூவர் மட்டுமே பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சர் ஆகிய இரு பொறுப்புக்களையும் ஒரே நேரத்தில் வகித்துள்ளனர்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் – 1. மாத சம்பளதாரர்கள் ரூ.40ஆயிரம் வரை போக்குவரத்து, மருத்துவ செலவினங்களுக்கு கழிவு பெறலாம், 2. 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதி 3. நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் 4. 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்த இலக்கு. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கிராமங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் 5. இலவச சமையல் காஸ் திட்டத்தில் 5 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 8 கோடியாக அதிகரிக்கப்படும் 6. சவுபாக்யா யோஜனா திட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடியில் ரூ.4 கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க இலக்கு 7. வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்தி செலவில் 1.5 மடங்கு உயர்வு. நாடு முழுவதும் 470 வேளாண் சந்தைகள் தேசிய மின்னணு வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன. வரும் மார்ச் (2018) மாதத்திற்குள் மேலும் 115 வேளாண் சந்தைகள் மின்னணு முறையில் இணைக்கப்படும் 8. ரூ.2,000 கோடியில் வேளாண் சந்தை உள்கட்டமைப்பு நிதியம் ஏற்படுத்தப்படும் மீனவர்கள், கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கிசான் அட்டை திட்டம் விரிவுபடுத்தப்படும் 9. ரூ.10 ஆயிரம் கோடியில் மீன்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்படும் 10. ராணுவத்திற்கு ரூ.2.91 லட்சம் கோடி ஒதுக்கீடு 11. தூய்மை இந்தியா திட்டத்தில் மேலும் 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும் 12. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் 13. அனைத்து நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 1 முதல் பான் எண் தனித்துவ அடையாள எண்ணாக பயன்படுத்தப்படும் ரூ.2.5 லட்சத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம் 14. முத்ரா கடன் திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க திட்டம் 15. குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக ரூ.3,794 கோடி ஒதுக்கீடு 16. ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு ரூ.7,140 கோடி ஒதுக்கீடு 17. ஆண்டிற்கு ரூ.250 கோடிக்குள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25 சதவீதமாக குறைப்பு 18. நிதிப்பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும் 19.தேசிய பயிற்றுநர் திட்டத்தில் 2020-க்குள் 50 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படும் 20. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.2350 கோடி செலவில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 21. ரூ. 20,852 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 22. அம்ரூத் திட்டத்தில் 500 நகரங்களில் குடிநீர் விநியோகம் மேம்படுத்தப்படும் 23. சுகாதாரம், கல்விக்கான செஸ் வரி 4 சதவீதம் உயர்வு 24. குடியரசுத் தலைவர் ஊதியம் ரூ. 5 லட்சம் (ப-1.50 லட்சம்), 25. குடியரசு துணைத் தலைவரின் ஊதியம் ரூ. 4 லட்சம் (ப. 1.25 ல), 26. ஆளுநர்களின் ஊதியம் ரூ.3.5 (ப. 1.10 ல) லட்சமாக உயர்வு. 12 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் ஊதியங்கள் உயர்த்தப்படவில்லை. கடைசியாக 2006ல் ஊதியம் உயர்த்தப்பட்டது 27. கிராமங்களில் இணைய வசதியை மேம்படுத்த 5 லட்சம் வைஃபை ஹாட்ஸ்பாட் அமைக்கப்படும் 28. உதான் திட்டத்தில் 56 விமான நிலையங்கள், 31 ஹெலிகாப்டர் தளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 16 விமான நிலையங்களில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது 29. ரயில்வே துறைக்கு ரூ. 1,48,528 கோடி ஒதுக்கீடு 4000 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும் நாடு முழுவதும் 600 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் அனைத்து ரயில் நிலையங்கள், ரயில்களில் படிப்படியாக வைஃபை இணையதள வசதி ஏற்படுத்தப்படும். சிசிடிவி கேமரா பொருத்தப்படும் அடுத்த 2 ஆண்டுகளில் 4267 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் நீக்கப்படும். 30. நடப்பாண்டில் (2018-19) 9000 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் 31. சுங்கச்சாவடி கட்டண நடைமுறை மின்னணுமயமாக்கப்படும் 32. தொலைத்தொடர்புத் துறை மேம்பாட்டிற்காக ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு 33. தொலைத்தொடர்பு மேம்பாட்டிற்காக சென்னை ஐஐடி-யில் 5ஜி சோதனை மையம் அமைக்கப்படும் நிறுவனங்களுக்கான தனி அடையாள அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்படும் 34. வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2016-17ல் 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். ரூ. 90 ஆயிரம் கோடி கூடுதலாக வருமான வரிவசூல் செய்யப்பட்டுள்ளது 35. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட ரூ.150 கோடி ஒதுக்கீடு 36. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற வரிசையில் 7வது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் 5வது இடத்திற்கு முன்னேறும் 38. பொருளாதார வளர்ச்சி நடப்பு அரையாண்டில் 7.2 முதல் 7.5 சதவீதமாக இருக்கும். 39. வருமான வரி கணக்கீடு முழுமையாக மின்னணு மயமாக்கப்படும். 40. பிட்காயின் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிப்டோ கரன்ஸிகளின் பரிவர்த்தனையும் சட்ட விரோதமாகும் என அறிவிப்பு 41. நாடு முழுவதும் 10 சுற்றுலா தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த 10 இடங்களும் தனியார் பங்களிப்புடன் முன்மாதிரி சுற்றுலா தலங்களாக உருவாக்கப்படும் கிராமங்களில் திறந்தவெளியல் மலம் கழிப்பதை தடுக்க கழிப்பறைகளை மத்திய அரசு கட்டி வருகிறது. கால்நடைகளின் சாணத்தை உரமாக்கவும், மறுசுழற்சி மூலம் அதைப் பயன்படுத்தும் திட்டத்தையும் திடக் கழிவுகளை பயோ-காஸ் மற்றும் பயோ-இயற்கை எரிவாயுவாக மாற்றும் கோபர்-தன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 42. நமாமி கங்கே எனப்படும் திட்டத்தின் கீழ் 187 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் ரூ.16,713 கோடியில் ஊரக சுகாதார மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும். 43. கங்கைக் கரையில் 4,465 கிராமங்களில் திறந்தவெளி மலம் கழிப்பதை தடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது 44. அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் – என்ற தொலைநோக்கு பார்வையை எட்டுவதற்காக ஆர்வமுள்ள 115 மாவட்டங்களை அரசு அடையாளம் கண்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, திறன்மேம்பாடு, நிதி உள்ளடக்கம், பாசனம், கிராம மின்மயம், குடிநீர், கழிப்பறை போன்ற சமூக சேவைகளில் முதலீடு செய்து உரிய காலத்தில் முடிவடையும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்படும். இந்த 115 மாவட்டங்களும் வளர்ச்சிக்கான மாதிரியாக மாறும்.

இ-வே பில் பிப். 1 முதல் அமல்

இ-வே பில் நடைமுறை தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் (2018) அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டததைத் தொடர்ந்து ஆந்திரப்பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், பீகார், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட்என 13 மாநிலங்களில் முழுமையாக அமலாகிறது. எஞ்சிய மாநிலங்கள் வரும் 2018, ஜூன் 1ஆம் தேதிக்குள் மாநிலங்களுக்குள்ளான இ-வே பில் நடைமுறைபடுத்தும். இ-வே பில் – மாநிலங்களிடையே சரக்குகளை அனுப்பும்போது இ-வே பில் எனப்படும் மின்னணு ரசீது முறை 2018, பிப். 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 50 ஆயிரத்திற்கு மேல் மதிப்புடைய பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து( மற்றொரு மாநிலத்திற்கு அனுப்பும்போது இ-வே பில் கட்டாயம். தேவையற்ற நடைமுறைகளை தவிர்த்து சரக்குகளை விரைவாக எடுத்துச்செல்ல இது வழி வகுக்கிறது.

உலக ஜனநாயக நாடுகள் பட்டியல் – நார்வே முதலிடம்

பிரிட்டன் தலைநகர் லண்டனை மையமாகக் கொண்டு ‘எகானமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யுனிட்’ (இஐயு) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ‘தி எகனாமிஸ்ட் குரூப்’ பை சேர்ந்தது. கடந்த 1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உலக அளவில் ஆராய்ச்சி செய்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டு உலக ஜனநாயக அட்டவணையில் இந்தியா 31வது இடத்தில் இருந்து 42வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியாவில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள், சிறுபான்மையினர்மீது நடக்கும் தாக்குதல்கள் போன்ற காரணங்களால் 42வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இதன்படி தொடர்ந்து நார்வே முதலிடத்தில் நீடிக்கிறது. ஐஸ்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, டென்மார்க், அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்கா 21வது இடத்தில் உள்ளது. ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவை குறையுள்ள ஜனநாயக நாடுகள் பட்டியலில் உள்ளன. மொத்தம் 165 நாடுகளில் 19 நாடுகள் மட்டுமே முழு ஜனநாயகம் உள்ள நாடுகளாக பட்டியலில் கூறப்பட்டுள்ளது. வடகொரியா-167, சிரியா-166, பாகிஸ்தான்-110, வங்கதேசம்-92, நேபாளம்-94, பூடான்-99வது இடத்தில் உள்ளன. எதேச்சதிகார நாடுகளில் சீனா-139, மியான்மர்-120, ரஷ்யா-135, வியட்நாம்-140வது இடத்தில் உள்ளன.

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் தஜிகிஸ்தானுடனான வடக்கு எல்லையில் இந்துகுஷ் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத் தொடரில் 191 கி.மீ. ஆழத்தில் இந்திய நேரப்படி ஜன. 31ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.2 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான், காஷ்மீர், டெல்லியிலும் உணரப்பட்டது.

செயலிழந்ததாக கருதப்பட்ட செயற்கைக்கோளில் மீண்டும் சிக்னல்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ‘தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைட் பிஸிக்ஸ் ஆய்வகத்திற்கு’ (The Johns Hopkins University Applied Physics Laboratory)
கடந்த 20ஆம் தேதி ஒரு தகவல் விண்வெளியிலிருந்து கிடைத்தது. அந்த சிக்னலானது நாசா அனுப்பிய 166வது செயற்கைக்கோளிலிருந்து கிடைத்தது என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் முடிந்தது என்று அறிவிக்கப்பட்ட செயற்கைக்கோளிலிருந்து சிக்னல் வந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த செயற்கைக்கோளிலிருந்து அடிப்படை விஷயங்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே கிடைத்துள்ளன. செயற்கைக்கோளின் பிரதான கட்டுப்பாட்டு கருவி மட்டும் செயல்பட்டு வருகிறது என்று நாசா விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது. மேலும் நடத்தப்பட்ட ஆய்வில் 2000ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நாசா விண்வெளி நிலையத்தால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. பூமியை சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் பூமிக்கு அவ்வப்போது தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005ஆம் ஆண்டு அந்த செயற்கைக்கோளைத் தொடர்பு கொள்ள முயன்றபோது நாசாவால் முடியவில்லை. இதையடுத்து 2007ஆம் ஆண்டு அந்த செயற்கைக்கோளின் பணி முடிந்துவிட்டதாக நாசா அறிவித்துவிட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்துக்கது.

152 ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட அரிய முழு சந்திர கிரகணம்

சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் நிலவு மீது விழும். இந்த நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். இந்நிகழ்வின்போது நிலவின் மீது நிழல் படிப்படியாக ஆக்கிரமித்து முழு நிலவையும் மறைக்கும். வழக்கமாக ஆண்டிற்கு 2 அல்லது 3 முறை நடைபெறும் சந்திர கிரகணத்தில் 2018, பிப். 1ஆம் தேதி நிகழ்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் ஜனவரி மாதத்தில் 2வதாக வரும் பவுர்ணமி தினத்தன்று (2018, பிப்.1) நிகழ்ந்துள்ளது. மேலும் சந்திர கிரகணம் நிகழ்ந்த நேரத்தில் பூமிக்கு அருகில் நிலவு வந்ததால் இயல்பைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாகவும் தெரிந்தது. இது ரத்த சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 152 ஆண்டுகளுக்கு முன்பு 1866ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் மூன் – சந்திர கிரகணத்துடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வு சூப்பர் மூன். நிலவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுவதே ‘சூப்பர் மூன்’
எனப்படுகிறது.
சிவப்பு நிலா – சூரிய ஒளி ஏழு நிறங்களை உள்ளடக்கியது. இவற்றில் ஊதா, நீலம் போன்ற நிறங்கள் பூமியின் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் மட்டும் சந்திரனில் விழுகின்றன. எனவேதான் முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.
ப்ளூ மூன் – ‘ப்ளூ மூன்’ ப்ளூ மூன் என்றதும் இந்நாளில் நிலவு நீல நிறமாக தோன்றுமா என்ற கேள்வி எழக்கூடும். உண்மையில் நிலவு நீல நிறமாக தோன்றாது. இது ஒரு பேச்சு வழக்கு மட்டுமே. ஒரே மாதத்தில் இரு பௌர்ணமிகள் வந்தால், இரண்டாவதாக வரும் பௌர்ணமியின் போது தோன்றும் நிலவு பேச்சு வழக்கில் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா-இந்தியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டது. தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையே ஜன. 5ஆம் தேதி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த தெஆ அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா – 3 விக்கெட் இழந்து 27 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் டெஸ்ட் – முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. (தெஆ-286, 130 – இந்தியா-209, 135).
2வது டெஸ்ட் – செஞ்சூரியனில் நடைபெற்ற 2வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா. இப்போட்டியில் கேப்டன் கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 153 ரன்கள் அடித்தார். இது இவருக்கு 21வது சதமாகும். (மு.இ-தெஆ-335, இந்தியா-307; இஇ-தெஆ258, இந்தியா-151. (2015ஆம் ஆண்டு ஜூன் முதல் இந்திய அணி எந்த டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை. மொத்தம் 9 தொடர்களை தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்திருந்தது. தற்போது இந்தியாவின் தொடர்ச்சியான வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது தெஆ).
3வது டெஸ்ட் – போட்டியில் 63 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா. (இந்தியா-187, 247; தெஆ-194, 177)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2018 – வோஸ்னியாக்கி, பெடரர் சாம்பியன்

மகளிர் ஒற்றையர் பிரிவு – இறுதிப்போட்டியில் 7-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, ருமேனியாவின் சிமோனா ஹாலப்-ஐ வீழ்த்தி பட்டம் வென்றார். முதல் அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 21ஆம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை 6-3, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் 2ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 37ஆம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸு-ஐ 6-3, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு – இறுதிப்போட்டியில் குரோஷிய வீரர் மரின் சிலிக்-கை 6-2, 6-7, (5/7), 6-3, 3-6, 6-1, என்ற செட் கணக்கில் வீழ்த்தி கோப்பை வென்றார் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர். இறுதி போட்டிவரை சென்ற 30 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ரோஜர் பெடரர் வெல்லும் 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மேலும் இது இவருக்கு 6வது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டமாகும். (ஆஸி. ஓபன்-6 – 2004, 06, 07, 10, 17, 18; பிரெஞ்சு ஓபன்-1 – 2009; விம்பிள்டன்-8 – 2003, 04, 05, 06, 07, 09, 12, 17; யுஎஸ் ஓபன்-5 – 2004, 05, 06, 07, 08). மேலும் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் 20 பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் பெடரர். ஒட்டுமொத்தமாக தனிநபர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் கோப்பை கைப்பற்றிய வீரர்களில் 4வது வீரர்.
அரையிறுதியில் தென்கொரியா வீரர் ஹியான் சுங் காயத்தால் விலகியதால் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் குரோஷிய வீரர் மரின் சிலிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் இரட்டையர் பிரிவு – இறுதிப் போட்டியில் டிமியா (ஹங்கேரி)-மிலாடினோவிச் (பிரான்ஸ்) ஜோடி 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னினா ஜோடியை வீழ்த்தி கோப்பை வென்றது.
கலப்பு இரட்டையர் பிரிவு – இறுதிப்போட்டியில் கனடாவின் கேப்ரிலா டப்ரோவ்ஸ்கி-குரோஷியாவின் மேட் பவிச் ஜோடி, இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஹங்கேரியின் டிமியா பாபாஸ் ஜோடியை வீழ்த்தி கோப்பை வென்றது. அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஹங்கேரியின் டிமியா பாபாஸ் ஜோடி 7-5, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மரியா ஜோஸ் மார்டினஸ் சான்சஸ், பிரேசிலின் மார்சிலோ டெமாலினர் ஜோடியை வீழ்த்தியது.

5 பேருக்கு சிறந்த பார்லிமெண்டேரியன் விருது

2013 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான சிறந்த பார்லிமெண்டேரியன் விருது ஜன. 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. முன்னதாக லோக்சபா சபாநாயகர் திரு. சுமித்ரா மகாஜன், உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், பாஜ மூத்த தலைவர் திரு. அத்வானி, ராஜ்யசபா துணைத் தலைவர் திரு. குரியன், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. கரண்சிங், இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் தலைவர் ராம்பகதூர் ராய், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் திரு. அனந்த்குமார் அடங்கிய குழு 2013 முதல் 5 ஆண்டுக்கான விருதுக்குரியவர்கள் பெயர்களை பரிந்துரை செய்தது. இதனை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்கள் தலைமையிலான முன்னாள் மற்றும் இன்னாள் எம்.பி.க்கள் 24 உறுப்பினர்கள் அடங்கிய பார்லிமெண்டரி குழு ஆய்வு செய்து, விருதுக்குரியவரை தேர்ந்தெடுத்துள்ளது.
2013 – நஜ்மா ஹெப்துல்லா (மணிப்பூர் ஆளுநரும், மாநிலங்களவை முன்னாள் எம்பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர், பாஜக)
2014 – ஹூகும் தேவ் நாராயண் யாதவ் (லோக்சபா எம்பி, பாஜக)
2015 – குலாம் நபி ஆசாத் (மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் – காங்கிரஸ்)
2016 – தினேஷ் திரிவேதி (திரிணாமுல் காங்கிரஸ், லோக்சபா எம்.பி.)
2017 – பார்த்துஹரி மகதாப் (பிஜு ஜனதாதளம், லோக்சபா எம்பி)
சிறந்த பாராளுமன்றவாதிக்கான விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்விருது பெற்ற முதல் பாராளுமன்றவாதி சமதா கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர்.

60வது கிராமிய விருது – 6 கிராமிய விருதுகளை வென்ற அமெரிக்க பாப் பாடகர்

அமெரிக்காவில் முக்கிய இசைக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், ஒலி பொறியாளர்கள், இசை ஆல்பங்களில் நடித்தவர்களுக்கு ஆண்டுதோறும் ‘கிராமி’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2018ஆம் ஆண்டிற்கான கிராமிய விருது (60வது கிராமிய விருது) வழங்கும் விழா ஜன. 28ஆம் தேதி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் புருனோ மார்ஸ் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டு, 6 பிரிவுகளில் விருதுகள் வென்றார். அவரே எழுதி இசையமைத்து பாடிய ‘24கே மேஜிக்’ என்ற பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த பாடகர், சிறந்த பாடல் ஆசிரியர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட 6 விருகளை மார்ஸ் வென்றார். இவருக்கு அடுத்து பிரபல பாடகர் கென்ட்ரிக் லாமர் 5 கிராமி விருதுகளை தட்டிச் சென்றார். இவரது ராப் இசையில் ‘ஹம்பிள்’ பாடலும், ‘டேம்ன்’ ராப் ஆல்பமும் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

புதிய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கேசவ் கோகலே

நாட்டின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக மூத்த ஐஎப்எஸ் அதிகாரியான விஜய் கேசவ் கோகலே (58) அவர்கள் ஜன. 29ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். (இப்பொறுப்பில் இருந்த எஸ். ஜெய்சங்கர் அவர்களின் பதவிக்காலம் ஜன. 28ஆம் தேதியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது).

உடன்குடியில் புதிய அனல்மின் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.10,453 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள மிக உயரிய அனல்மின் நிலையத்திற்கான அடிக்கல்நாட்டு விழா சென்னை கலைவாணர்அரங்கில் ஜன. 29ஆம் தேதி நடைபெற்றது. புதிய அனல்மின் நிலையத்திற்கு முதல்வர் கே. பழனிசாமி அவர்கள் அடிக்கல் நாட்டினார். பெல் நிறுவனத் தலைவர் அதுல் சோப்டி அவர்கள் பேசும்போது, பெல் நிறுவன ஒட்டுமொத்த வருவாயில் 35 சதவீதம் தமிழகத்தில்இருந்தே கிடைக்கிறது. கடந்த 1969ல் பேசின்பாலம் அருகில் அமைக்கப்பட்ட முதல் அனல்மின் நிலையம், பெல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட திட்டம். தற்போது உடன்குடி திட்டம் உட்பட 4 திட்டங்கள் தமிழகத்தில் பெல் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை 42 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2018-19ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை

நடப்பு நிதியாண்டின் (2018-19) பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் ஜன. 29ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில், நடப்பு நிதியாண்டில் (2017-18) இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.75 சதவீதமாக உள்ளது. இது 2018-19ஆம் நிதியாண்டில் 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும். உலகில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா தொடர்ந்து முன்னேறும். நாட்டின் தொழில்துறை வளர்ச்சி 4.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு உற்பத்தித்துறையின் வளர்ச்சி 8 சதவீதமாகவும், வேளாண்மைத் துறையின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும். கடந்த 3 ஆண்டுகளில் இந்திய பொருளாதார வளர்ச்சியின் சராசரியைவிட 4 சதவீத புள்ளிகள் அதிகமாகவே உள்ளன. மேலும் இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நாட்டின் சராசரி சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 3.3 சதவீதமாக குறைந்துள்ளது. சேவைத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை சுமார் 6.3 கோடி குறைவாக உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துவிட்டது. 2005-06ல் 36 சதவீத பெண்கள் வேலைக்கு சென்று வந்தனர். அது 2015-16ல் 24 சதவீதமாக குறைந்துவிட்டது என்றார்.

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் – நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கியது. இத்தொடர் 2 கட்டங்களாக நடக்கிறது. பிப்ரவரி 9ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை 2ஆம் கட்டமாகவும் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றியதாவது, மத்திய அரசின் நலத் திட்டங்கள், கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார். உலக அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. நமது நாட்டிடம் தற்போது ரூ. 26 லட்சத்து 24 ஆயிரம் கோடிக்கு அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு 2022ம் ஆண்டிற்குள் 2 மடங்கு அதிக வருவாய் கிடைக்க செய்வதற்காக அரசு உறுதிப் பூண்டுள்ளது. விவசாய சந்தைகள் ஆன்லைன் வர்த்தகத்துடன் இணைக்கப்பட்டு வருகிறது. இ-நாம் ஆன்லைன் மூலமாக இதுவரை ரூ.36 ஆயிரம் கோடி மதிப்புள்ள விவசாய உற்பத்தி பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாட்டின் பணவீக்கம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவை சராசரியாக குறைக்கப் பட்டுள்ளன. 2016-17ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்காலிகமாக குறைந்திருந்து. ஆனால் 2வது காலாண்டில் நிலைமை மாறிவிட்டது. பல்வேறு மின்னணு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முத்ரா திட்டத்தின் மூலம் ரூ.10 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ன. இதன்மூலம் ரூ.4 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆண்கள் துணையின்றி 45 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் புனித யாத்திரை செல்வதற்கான சீர்த்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் 2018ஆம் ஆண்டு முதல் 1300 இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். நாட்டில் உள்ள 2.5 கோடி ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் (உடல்ஊனமுற்றோர்) வாழ்க்கை தரத்தை உயர்த்த ஊனமுற்றோர் உரிமை சட்டம் – 2016 கொண்டு வந்துள்ளது. அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடும், 5 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்துத் துறையாக ரயில்வே இருக்கிறது. அதனால்தான் இத்துறையை நவீனமயமாக்கவும், மேம்படுத்தவும் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. உலகின் தலைசிறந்த ரயில் போக்குவரத்து துறையாக இந்திய ரயில்வேயை மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்கும் திட்டத்தை செயல்படுத்து வதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும் புதிய மெட்ரோ ரயில் திட்ட கொள்கையையும் அரசு வகுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 11 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
நாடு முழுவதும் ஒரே தேர்தல் – நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி அனைத்து கட்சிகளும் விவாதம் நடத்தி, ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் அடிக்கடி தேர்தல் நடப்பதால் மக்கள் கவலை அடைகின்றனர். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ச்சியான தேர்தல்கள் நடப்பதால் நாட்டின் பொருளாதாரமும், வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அரசுக்கு ஏற்படும் மிகப் பெரிய செலவால் நிதிச்சுமை உருவாகிறது. ‘புதிய இந்தியா’ கனவு திட்டம் ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ சொந்தமானது அல்ல. இந்த கனவை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றார். மேலும் ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும். இதன் ஒரு கட்டமாக போலியாக பதிவு செய்யப்பட்ட 3.5 லட்சம் கம்பெனிகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்டதின் மூலம் நாட்டின் பொருளாதாரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு மிகப்பெரிய வரி சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு
ரூ.2 லட்சம் கோடி மறுமுதலீடு வழங்கப்பட்டு, அதற்கு வலிமை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி நடைமுறைகள் வெளிப்படையாக்கப்பட்டுள்ளன. பின்னர் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் தாக்கல் செய்தார். பின்னர் பிப். 1ஆம் தேதிக்கு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

புதிய கரும்பு ரகம் – கோஜி6 – கோவை வேளாண் பல்கலை அறிமுகம்

உவர் நிலத்திலும் அதிக விளைச்சல் தந்து, உயர்ரக வெல்லம் அளிக்கக் கூடிய புதிய கரும்பு ரகமான ‘கோஜி 6’ ரகத்தை கோவை வேளாண் பல்கலையின் கரும்பு ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது 4.8 லட்சம் ஏக்கர் நிலங்கள் உவர் நிலங்களாக உள்ளன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் நிலம் மற்றும் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உவர் நிலங்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. வேலூர், கடலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருச்சி, சேலம் போன்ற உவர் நிலங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கரும்பு மகசூல் மற்றும் வெல்லத்தின் தரம் குறைவாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கோஜி6 என்ற புதிய கரும்பு ரகத்தை கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு சொந்தமான வேலூர் மாவட்டம், மேலாலத்தூரில் இயங்கும் கரும்பு ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது. இந்த கரும்பு ரகம் உப்புத் தன்மையை தாங்கி வளரக்கூடியது.
வேலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் திருமுருகன் அவர்கள் கூறியதாவது, உவர் நிலங்கள் மற்றும் உப்பு நீர்கொண்டு சாகுபடி செய்யப்படும் கரும்பு பயிர்களில் விளைச்சல் மற்றும் வெல்லத்தின் தரம் குறைகிறது. இதற்கு தீர்வாக எச்ஆர்-83-144 மற்றும் கோஎச்-119 ஆகிய கரும்பு ரகங்களில் இருந்து இனக்கலப்பு முறையில் கோஜி 6 என்ற புதிய கரும்பு ரகம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாபு கி குடியா திட்டம் – சத்தீஸ்கர் அரசு தொடங்கியது

பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஆளுக்கு ஒருபுறம் வேலைக்கு சென்றுவிட வயதான முதியவர்கள் தனிமையில் நாட்களை கழித்து வருகின்றனர். இப்படிப்பட்ட முதியவர்களின் தனிமையை போக்குவதற்காகவும், அவர்கள் பிறருடன் மனம் விட்டு பேசி மகிழும் வகையிலும் சத்தீஸ்கர் அரசு (பாஜக) ‘பாபு கி குடியா’ திட்டம் தொடங்கியுள்ளது. முதல் முயற்சியாக ராய்ப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பூங்காவில் இத்திட்டத்தின் கீழ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஜன. 28ஆம் தேதி முதல்வர் ராமன்சிங் அவர்கள் தொடங்கி வைத்தார். பாபு கி குடியா திட்டத்தின்படி பூங்காக்கள் மற்றும் இதர பொது இடத்தில் முதியோர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய 50 குடில்கள் அமைக்கப்படும். இந்த குடில்களில் முதியோர்கள் விளையாடுதல், தொலைக்காட்சி பார்த்தல் என பிறருடன் தங்கள் நேரத்தை கழிக்கலாம்.

2017ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட வார்த்தை ஆதார்

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஹிந்தி மற்றும் இதர இந்திய மொழிகளின் வார்த்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட ஹிந்தி வார்த்தையை தேர்வு செய்ய ஆக்ஸ்போர்டு அகராதி முதல் முறையாக பொதுமக்களிடம் கருத்து கேட்டது. லட்சக்கணக்கானோர் தங்கள் கருத்துகளை அனுப்பினர். அவர்களில் பெரும்பாலானோர் ஆதார், நோட்பண்டி, மித்ரன், ஸ்வாச், விகாஸ், யோகா, பாகுபலி ஆகிய வார்த்தைகள் குறிப்பிட்டிருந்தனர். ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் ஆக்ஸ்போர்டு அகராதி மொழியறிஞர்கள் ஹிந்தி மொழியறிஞர்கள் இணைந்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் 2017ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட இந்தி வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அந்த வார்த்தை மிகவும் பிரபலமாகி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் கொடியேற்றினார்

69வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே தேசியக் கொடி ஏற்றினார்.

நாட்டின் 69வது குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக 10 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு அசோக் சக்ரா விருது – ஜோதி பிரகாஷ் நிராலா

நாட்டின் 69வது குடியரசு தின விழா ஜன. 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். இதையொட்டி நடைபெற்ற இந்தியாவின் வலிமை, ஒற்றுமை, கண்காட்சி ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் பேரணி நடைபெற்றது. முப்படைகளிலும், வீரதீர செயல்கள் செய்த வீரர்களை கௌரவிக்கும் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கினார். இதில் அசோக் சக்ரா விருதை உயிர்த்தியாகம் செய்த மறைந்த ஜோதி பிரகாஷ் நிராலா அவர்களுக்கு அவரது தாய் மற்றும் மனைவியிடம் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர். இதேபோல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பாக கொடியேற்றப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் – ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக ஏதாவது ஒரு நாட்டின் தலைவர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் 69வது குடியரசு தின விழாவில் (2018) இந்தியா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாட்டு தலைவர்களும் டெல்லி வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். (தாய்லாந்து பிரதமர் திரு. சான் ஓ சா, இந்தோனேஷிய அதிபர் திரு. ஜோகோ, சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சைன் லூங், புரூனே மன்னர் திரு. ஹாஜி ஹஸ்ஸானல், லாவோஸ் பிரதமர் திரு. தோங்லூன், மியான்மர் தலைமை ஆலோசகர் திரு. ஆங் சான் சூகி, கம்போடியா பிரதமர் திரு. ஹன் சென், மலேசிய பிரதமர் திரு. முகமது நஜிப் அப்துல் ரசாக், பிலிப்பைன்ஸ் அதிபர் திரு. டோட்ரிகோ, வியட்நாம் பிரதமர் திரு. குயென் யுவான்).
அசோக் சக்ரா விருது – நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய ‘அசோக் சக்ரா’விருது விமானப்படையில் கமாண்டோ பிரிவு வீரர் ஜோதி பிரகாஷ் நிராலா அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் 2017, நவம்பர் 18ஆம் தேதி ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை விமானப் படையின் கருடா கமாண்டோ பிரிவு வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது நடைபெற்ற சண்டையில் இரு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அணிவகுப்பு விருது – குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் கலந்து கொண்ட ஊர்திகளில் மகாராஷ்டிர மாநில ஊர்திக்கு (சத்ரபதி சிவாஜிக்கு முடிசூட்டப்பட்ட நிகழ்ச்சி சிறப்பான சித்தரிப்பு) முதல் பரிசு வழங்கப்பட்டது. அசாம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் ஊர்திகளுக்கு முறையே 2 மற்றும் 3வது பரிசு அளிக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய கடல் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து – ஆசியான் மாநாட்டில் பிரதமர் உரை

இந்தியா-ஆசியான் மாநாடு டெல்லியில் ஜன. 25ஆம் தேதி தொடங்கியது. இதில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா-ஆசியான் நாடுகளுக்கு இடையேயான உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு மாநாட்டின் தொடக்கத்தில் சிறப்பு தபால்தலையை பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டார். கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, மக்கள் தொடர்பு, வர்த்தக உறவு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்தும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்தும் இந்தியா மற்றும் ஆசியான் தலைவர்கள் ஆலோசித்தனர். இந்த மாநாட்டில் பிரதமர் உரையாற்றியதாவது, ஆசியான் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக இந்தியா வந்துள்ளது. ஒவ்வொரு இந்தியரையும் கவர்ந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா-ஆசியான் வர்த்தக உறவு 25 மடங்கு அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய கடல் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா-ஆசியான் நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் குடியரசு தினவிழாவில் ஆசியான் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வது வரலாற்று சிறப்புமிக்கது. இதற்கு முன் இதுபோல் நிகழ்வு நடைபெற்றதில்லை என்றார்.

பத்ம விருதுகள் 2018 இளையராஜா, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 6 தமிழருக்கு விருது

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் இன்ஜினியரிங், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குவோருக்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். 2018ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் ஜனவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் பத்ம விபூஷண்-3, பத்ம பூஷண்- 9, பத்மஸ்ரீ-73 என 85 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விபூஷண் (3) – இளையராஜா (இசையமைப்பாளர் – தமிழ்நாடு), குலாம் முஸ்தபா கான் (இசையமைப்பாளர் – மகாராஷ்டிரா), பரமேஸ்வரன் (இலக்கியம் – கேரளா) ஆகிய மூவருக்கு வழங்கப்படுகிறது.
பத்ம பூஷண் (9) – தோனி (கிரிக்கெட் வீரர்), பங்கஜ் அத்வானி (ஸ்நூக்கர் வீரர்), ராமச்சந்திரன் நாகசுவாமி (தமிழக அகழ்வாராய்ச்சி நிபுணர்) உள்ளிட்ட 9 பேருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
பத்மஸ்ரீ (73) – விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் (நாட்டுப்புற பாடகி – தமிழ்நாடு), ராஜகோபால் வாசுதேவன் (பிளாஸ்டிக் கழிவு மூலம் உறுதியான ரோடு அமைக்கும் புதிய முறையை கண்டறிந்த மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர்) , ஞானம்மாள் (யோகா பயிற்சியாளர் – கோவை), அரவிந்த் குப்தா – கல்வி மற்றும் இலக்கியம், லட்சுமி குட்டி – மருத்துவம், பைய்ஜு ஷியாம் – கோண்டு ஓவியம், சுதான்ஷு பிஸ்வாஸ் – சமூக சேவை, முரளிகந்த் பெட்கர் – விளையாட்டு, சுபாஷினி மிஸ்திரி – சமூக சேவை, யீஷி தோடென் – மருத்துவம், ரோமுலஸ் விட்டேகர் – வனவிலங்கு பாதுகாப்பு, ராணி மற்றும் அபயபேங் – மருத்துவம், சம்பத் ராம்டீகி – சமூக சேவை, சந்துக் ருயிட் – கண் மருத்துவம், எம்.ஆர். ராஜகோபால் – மருத்துவம், கலாகட்டி நரசம்மா – மருத்துவ சேவை, சோம்தேவ் தேவ் வர்மன் – டென்னிஸ் உள்ளிட்ட 73 பேருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

பச்சோந்திகள் நிறம் மாறுவது எப்படி? – விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

பச்சோந்தி நிறம் மாறுவது எப்படி என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஜெர்மனியின் மூனிச் நகரில் உள்ள விலங்கியல் துறை சார்பில் பிராங்க் கிளாவ் என்பவர் தலைமையில் ஆராய்ச்சி நடந்தது. அதில் பச்சோந்திகள் தங்கள் நிறங்களை மாற்றி சிக்னல் கொடுப்பது எலும்புகள் மூலமாகத் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக தலை, முகம் ஆகியவற்றில் உள்ள எலும்புகள் மற்றும் அதன் தோலில் உள்ள புளுரெசன்ஸ் தான் காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். புளுரெசன்ஸ் என்பது ஒளிக்கதிர்களை உறிஞ்சி வெளியிடுவது அல்லது மின்காந்த கதிர்வீச்சுகளை வெளியிடும் சக்தி கொண்டது ஆகும். இது பச்சோந்தியின் உடலில் உள்ளது. ஏற்கனவே பச்சோந்தியின் கண் பல்வேறு நிற ஒளியை வெளியிடக்கூடியது. மேலும், புளுரெசன்ஸ் இருப்பதால்தான் சதுப்பு நிலப் பரப்பிலும் பச்சோந்திகளால் நிறத்தை மாற்றிக் கொள்ள முடிகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கெனவே பச்சோந்தி எலும்பில் புறஊதா ஒளி உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது புளுரெசன்ஸ் எலும்பில் இருப்பதால்தான் எந்த இடத்திலும் நிறம் மாற முடிகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பால் எதிர்க்கால ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதுகின்றனர். (முன்னதாக பச்சோந்தி இடத்திற்கு தகுந்தாற்போல் தனது நிறத்தை மாற்றுகிறது என்றார்கள். பின் இல்லை எனவும், தனது எண்ணத்தின்படிதான் நிறத்தை மாற்றுகிறது. இதன் மூலம் சுற்றி இருப்பவர்களுக்கோ அல்லது மற்ற பச்சோந்திகளுக்கோ ஏதோ சேதி சொல்லப்போகிறது என்று கண்டுபிடித்தார்கள். இதற்கு பச்சோந்திகள் உடலில் இருக்கும் நிறமிகள்தான் காரணம் என்றார்கள்)

நிதி மசோதா நிறைவேற்றம் – தற்காலிக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது அமெரிக்க அரசு

எதிர்க்கட்சிகளுடன் சமரசம் ஏற்பட்டதால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து 3 நாள் முடங்கிய (ஜன. 20-22) அமெரிக்க அரசு ஜன. 23ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. இதுவும் தற்காலிகமானதே. பிப். 8ஆம் தேதி வரைக்கான நிதி செலவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார மாநாடு – பிரதமர் உரை

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு (World Economic Forum) ஜன. 23ஆம் தேதி தொடங்கியது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றியதாவது, சர்வதேச அளவில் தீவிரவாதம், புவி வெப்பமடைதல், உள்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை பாதுகாக்க அந்தந்த நாடுகள் மேற்கொள்ளும் பாதுகாப்புவாத கொள்கைகள் மிகுந்த அச்சுறுத்தலாக உருவாகி வருகின்றன. மனித சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பு இந்த மாநாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது மிகவும் சரியான ஒன்றாகும். சர்வதேச அளவில் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் மூன்று விஷயங்கள் பெருகி வரும் சூழலில் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. உலகின் பல நாடுகளில் இப்போது பாதுகாப்புவாத கொள்கை பின்பற்றப்படுகிறது. இதனால் சில நாடுகளில் வரி மற்றும் வரிவிலக்கு போன்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன. இது உலகமயமாக்கல் எனும் சித்தாந்தத்தை சீர்குலைத்து விடும். புவி வெப்பமடைவது இயற்கையால் ஏற்படும் பேரழிவுக்கு இந்த சமூகம் பொறுப்பாகிவிடக் கூடாது. இதுவும் இந்த சமூகத்திற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய இயற்கை சவாலாகும். அதேபோல மனித சமூகமே மனிதர்களை அழிக்கும் தீவிரவாதம் ஆங்காங்கே தலையெடுக்கிறது. இதுவும் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையான விஷயமாகும். அந்நிய முதலீட்டாளர் களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சாத்தியமான வகையில் வளர்ச்சிக்கான வழிமுறைகள் இந்தியாவில் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் 90 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகின்றன. இந்த சமூகத்தின் இப்போதைய தேவைக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் இப்புவியை பாதுகாப்பாக விட்டுச் செல்வது பெரும் சவாலான விஷயமாகும். நாம் அனைவரும் ஒற்றுமையாக மனித நேயத்தோடு இந்த உலகைக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. சர்வதேச வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் உலகமயமாக்கல் சித்தாந்தத்தைக் கொண்டு வந்த பிறகு நாடுகள் தங்களது எல்லைகளை சுருக்கிக் கொள்கின்றன. இது நாடு கடந்த வர்த்தகத்தை பாதிக்கும் விஷயமாகும். தீவிரவாதம் எந்த வடிவத்தில் எழுந்தாலும் அது ஆபத்தானது. இந்தியா அகிம்சையை விரும்பும் நாடு. தீவிரவாதம் நாடுகளின் பல எல்லைகளைக் கடந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. எனவே தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். முதலீடுகள் செய்யவும், அமைதியாக ஆரோக்கியத்துடன் வாழவும் ஏற்ற நாடாக இந்தியா திகழ்கிறது என்றார் பிரதமர் திரு. மோடி. (சுமார் 21 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச பொருளாதார மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).

முதலீடுகளுக்கு ஏற்ற சிறந்த நாடுகள் பட்டியல் – 5வது இடத்தில் இந்தியா

சர்வதேச செலாவணி நிதியம் (International Monetary Fund) வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இந்தியா விரைவான வளர்ச்சியை எட்டும் நாடுகளில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முதலீட்டுக்கு உகந்த நாடுகள் குறித்து ) Price Waterhouse Cooper நிறுவனம் சர்வதேச அளவில் பிரபல நிறுவனங்களின் சிஇஓ-க்கள் இடையே நடத்திய கருத்துக் கணிப்பில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தை பிடித்தது இந்தியா. ஜப்பான் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. உலகில் முதலீடுகளுக்கு ஏற்ற சிறந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2வது இடத்திலும் உள்ளன. ஜெர்மனி, பிரிட்டன் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போது நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் (World Economic Forum) பங்கேற்பதால் மேலும் அதிக முதலீடுகளை ஈர்க்க கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

22வது தலைமை தேர்தல் ஆணையராக ராவத் பதவியேற்பு

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக இருந்த ஓம் பிரகாஷ் ராவத் அவர்கள் 22வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட இவர், ஜன. 23ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ராவத்திற்கு பதிலாக புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹரியானா ஐஏஎஸ் கேடர் அதிகாரியாக பணியாற்றியவர். (முன்னதாக 21வது தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த அச்சல் குமார் ஜோதி அவர்களின் பதவிக் காலம் ஜன. 22ஆம் தேதியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது)
ஓம்பிரகாஷ் ராவத் – மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராவத் அவர்கள் 1977ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

விக்ரம் சாராபாய் விண்வெளி இயக்குநராக சோமநாத் பொறுப்பேற்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் (விஎஸ்எஸ்சி) இயக்குநராக விஞ்ஞானி எஸ். சோமநாத் அவர்கள் ஜன. 22ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இவர் கடந்த 1985ல் இஸ்ரோ அமைப்பில் பணியில் சேர்ந்தார். அவர் பிஎஸ்எல்வி ராக்கெட் ஆரம்ப கட்ட தயாரிப்பு நிலையில் அதன் ஒருங்கிணைப்பு தொடர்பான குழுவின் தலைவராக இருந்தவர். விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்த கே.சிவன் அவர்கள் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை – 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து

6 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை புரிந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு அவர்களை ஜன. 15ஆம் தேதி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் நேரில் சென்று வரவேற்றார். இருநாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் சைபர் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் தொடர்பான உடன்படிக்கைகளும் கையெழுத்தாகின.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு அவர்கள், ஜன. 17ஆம் தேதி தனது மனைவி சாராவுடன் குஜராத் சென்றார். அவருடன் பிரதமர் மோடி அவர்களும் சென்றார். குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர்கள் அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் சென்றனர். இது சபர்மதி ஆசிரமத்தில் நிறைவு பெற்றது. இவர்களை வரவேற்பதற்காக ஆங்காங்கே தோரணங்கள், அலங்காரம் மற்றும் 50 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பிரதமர் மோடி அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு வருகை புரிந்துள்ள 3வது வெளிநாட்டு பிரதமர் நெதன் யாகு ஆவார். (இதற்கு முன்பு ஜப்பான் பிரதமர் திரு. ஷின்சோ அபே, சீன பிரதமர் திரு. ஷி ஜின்பிங் ஆகியோர் சபர்மதி ஆசிரமம் சென்றனர்). 2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் பலியான 166 பேருக்காக அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் ஜன. 18ஆம் தேதி (2018) திறந்து வைத்தார்.

டெல்லியில் 20 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் – ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 2015ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் 66 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி ஆட்சி அமைத்தது.அப்போது 21 எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை செயலர்களாக நியமித்தார் முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால். அப்பதவி அமைச்சர் பதவிக்கு நிகரானது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிக்கக் கூடாது. இந்நிலையில் சட்டத்தை மீறி 2 பதவி வகித்து வரும் 21 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி இளம் வழக்கறிஞர் பிரசாந்த் படேல் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பே குடியரசுத் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பினார். அக்கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் 20 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜன. 19ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஜன. 21ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து 20 பேரின் எம்எல்ஏ பதவி பறிபோனது. (ஏற்கெனவே ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் ஏவி இஸ்ரோ சாதனை

1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) உலக அளவில் சிறந்த 10 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்துள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை கண்காணித்தல், விண்வெளி ஆராய்ச்சி போன்ற பயன்பாடுகளுக்காக செயற்கைக்கோள்களை தயாரித்து இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. தன்னுடைய நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் வர்த்தக ரீதியாக இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்காக ‘ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் இஸ்ரோவின் வர்த்தக பிரிவாக செயல்படுகிறது. இந்நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் பணியை இஸ்ரோ கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகிறது. இதுவரை (1999-2017) 237 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ தனது ராக்கெட்டின் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி உள்ளது. குறிப்பாக ஒரே ஆண்டில் அதாவது 2017ஆம் ஆண்டில் மட்டும் 19 நாடுகளைச் சேர்ந்த 130 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும் 106 செயற்கைக் கோள்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இதற்கு அடுத்தபடியாக இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சொந்தமான தலா 3 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், கஜகஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், லட்வியா, சிலி, ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, ஸ்லோவாக்யா, லித்துவேனியா, பிரான்ஸ், செக் குடியரசு ஆகிய 15 நாடுகளுக்கு சொந்தமான தலா ஒரு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும் 2016ல் 22 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், 2015ல் 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இதன்படி முதல்முறையாக 130 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஒரே ஆண்டில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சர்வதேச விண்வெளி வர்த்தகத்தில் இந்தியா தடம் பதித்துள்ளது. வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ தனது பிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்தி வருகிறது. இதுவரை 42 PSLV
ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 40 வெற்றியை தந்துள்ளன. மேலும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற முன்னணி நாடுகளைக் காட்டிலும் இந்தியா குறைந்த கட்டணமே வசூலிக்கிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக்கோள்கள் ஆகும். இவற்றை இஸ்ரோவின் பிரதான செயற்கைக்கோளுடன் சேர்த்து ஒரே ராக்கெட்டில் செலுத்தும்போது ராக்கெட்டின் உற்பத்தி செலவு குறையும், வருவாயும் கிடைக்கும்.

2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ் – நூல் வெளியீட்டு விழா

நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா அவர்கள் சிறையில் இருந்தபோது எழுதிய ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ (2G SAGA Unfolds) எனும் நூல் வெளியீட்டு விழா டெல்லியில் ஜன. 20ஆம் தேதி வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

செலவின மசோதா நிறைவேறாததால் – அமெரிக்க அரசு முடங்கியது

அமெரிக்காவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டு கணக்கிடப்படுகிறது. அதன்படி 2018ஆம் ஆண்டிற்கான நிதியாண்டு 2017 அக்டோபர் மாதம் தொடங்கியது. அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செலவின மசோதா நிறைவேற்றப்படுகிறது. நடப்பு 2018ஆம் நிதியாண்டிற்கான இதுவரை 3 முறை குறுகிய கால செலவின மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது 4வது முறையாக குறுகிய கால செலவின மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா ஜன. 19ஆம் தேதிக்குள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரவேண்டும். ஆனால் 435 பேர் கொண்ட மக்களவையில் 230 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஜன. 18ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஜன. 19ஆம் தேதி மேலவையில் (செனட் சபை) செலவின மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 100 உறுப்பினர்கள் கொண்ட அந்த அவையில் மசோதாவை நிறைவேற்ற 60 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால் 50 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். இதனால் செலவின மசோதா நிறைவேற்ற முடியாததால் அரசின் நிர்வாகம் முடங்கியது. தேசிய பூங்காக்கள், நினைவு சின்னங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. அரசு துறைகளின் பல்வேறு அலுவலகங்கள் முடங்கியுள்ளன. சுமார் 20 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அத்தியாவசிய தேவைகளான ராணுவம், போலீஸ், அஞ்சல் சேவை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, மருத்துவ சேவை, சிறைகள், வரிவிதிப்பு, மின் உற்பத்தி ஆகிய துறைகள் தொடர்ந்து இயங்குகின்றன. அமெரிக்காவில் சட்டபூர்வ அனுமதியின்றி 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிக்கின்றனர். அவர்களை அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்ப அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவர்கள் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரம் உட்பட மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் செலவின மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.

டெல்லியில் 20 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் – ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 2015ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் 66 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி ஆட்சி அமைத்தது.அப்போது 21 எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை செயலர்களாக நியமித்தார் முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால். அப்பதவி அமைச்சர் பதவிக்கு நிகரானது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிக்கக் கூடாது. இந்நிலையில் சட்டத்தை மீறி 2 பதவி வகித்து வரும் 21 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி இளம் வழக்கறிஞர் பிரசாந்த் படேல் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பே குடியரசுத் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பினார். அக்கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் 20 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜன. 19ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஜன. 21ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து 20 பேரின் எம்எல்ஏ பதவி பறிபோனது. (ஏற்கெனவே ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய ராணுவத்தில் அக்னி வகை ஏவுகணைகள் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன. 700 கி.மீ. தூரம் செல்லும் அக்னி-1, 2 ஆயிரம் கி.மீ. தூரம் வரை செல்லும் அக்னி-2, 2500 கி.மீ. முதல்3500 கி.மீ. தூரம் வரை செல்லும் அக்னி-3 மற்றும் அக்னி-4 வகை ஏவுகணைகள் இந்தியாவிடம் ஏற்கனவே உள்ளன. இந்நிலையில் 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை உருவாக்கப்பட்டது. இதன் முதல் சோதனை 2012, 2வது சோதனை 2013, 3வது சோதனை 2015, 4வது சோதனை 2016ல் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் 5வது சோதனை ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் (வீலர் தீவு) 2018, ஜன. 18ஆம் தேதி காலை 9.54 மணி அளவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவப்பட்ட அக்னி-5 ஏவுகணை 19 நிமிடத்தில் 4900 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கியது.

மத்தியப்பிரதேச ஆளுநராக முன்னாள் குஜராத் முதல்வர் நியமனம்

மத்தியபிரதேச ஆளுநராக இருந்த ராம் நரேஷ் யாதவ் அவர்களின் பதவிக் காலம் கடந்த 2016ல் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து குஜராத் ஆளுநர் ஓ.பி. கோலி அவர்களிடம் கூடுதலாக மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மத்தியப் பிரதேச புதிய ஆளுநராக குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுரையில் ஜன. 19ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா

ஆஸ்திரேலிய கூட்டமைப்பு (AG – Australia Group) சார்பில் ஜன. 19ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2018ஆம் ஆண்டில் ஜனவரி 19ஆம் தேதி அன்று, ஆஸ்திரேலிய கூட்டமைப்பில் 43வது உறுப்பு நாடாக முறைப்படி இணைந்தது. இந்த கூட்டமைப்பானது ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படக் கூடிய பொருள்கள், சாதனங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவை பரவுவதைத் தடுப்பதற்காக பணியாற்றும் நாடுகளின் தன்னார்வ மற்றும் ஒத்துழைப்பு அமைப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி – 4வது பட்டியலில் 9 நகரங்கள்

டெல்லியில் மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்கள் (ஜன. 19) கூறியதாவது, 4வது சுற்றாக 9 நகரங்கள் பொலிவுறு நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் பரேலி, மொராதாபாத், சஹாரன்பூர் (உ.பி); ஈரோடு (தமிழ்நாடு); பிகார் ஷெரீஃப் (பீகார்); சில்வாசா (தாத்ரா நாகர் ஹவேலி); டையூ நகரம் (டாமன் மற்றும் டையூ); இடா நகர் (அருணாச்சலப் பிரதேசம்); கவரத்தி (லட்சத்தீவுகள்) ஆகியவை இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) பட்டியலில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.500 கோடியை மத்திய அரசு அளிக்கும். பொலிவுறு நகரங்களாக தேர்வு செய்யப் பட்டுள்ள நகரங்களில் இதுவரை ரூ.1,40,000 கோடி மதிப்பிலான 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். தமிழகத்தில் பொலிவுறு நகரங்கள் – சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, ஈரோடு.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு – 6 ஆண்டுகளுக்குப் பிறகு

தமிழக அரசு ஜன. 19ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 22,509 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டீசல் விலை உயர்வு, தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட காரணங்களாலும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால், அரசு போக்குவரத்து கழகங்களால் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான வருவாய் ஈட்ட இயலவில்லை. பேருந்துகளை சிறப்பாக பராமரித்து இயக்குவதிலும் தொடர்ந்து இடர்பாடுகள் ஏற்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்களால் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான வருவாய் ஈட்ட இயலவில்லை. பேருந்துகளை சிறப்பாக பராமரித்து இயக்குவதிலும் தொடர்ந்து இடர்பாடுகள் ஏற்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்காக தமிழக அரசு மானியம் வழங்கி வந்தாலும் வருவாய்க்கும் இயக்க செலவுக்கும் உள்ள இடைவெளி இழப்பு நாளொன்றுக்கு ரூ.9 கோடியாக உயர்ந்துள்ளது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. (ஏற்கெனவே கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 18ல் கட்டணம் உயர்த்தப்பட்டது). கடந்த 7 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, தமிழக அரசு ரூ.12,059 கோடி மானியமாக வழங்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள தொடர் நஷ்டம் ரூ.20,488 கோடியாக உள்ளது. மக்களுக்கு போக்குவரத்து சேவையை தொடர்ந்து வழங்க தற்போது கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது.

25வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – 29 பொருட்கள், 53 சேவைகளுக்கான வரிவிகிதம் மாற்றம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 25வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் தலைமையில் ஜன. 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 29 பொருட்கள் மற்றும் 53 சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. புதிய வரிவிகிதங்கள் ஜன. 25ஆம் தேதி முதல் (2018) அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 29 கைவினைப் பொருட்களுக்கான வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் ஜன. 18ஆம் தேதி அறிவித்தது. இதன்படி திரிபுரா மாநிலத்தில் பிப். 18ஆம் தேதி, மேகாலயா, நாகாலாந்து ஆகிய இரு மாநிலங்களிலும் பிப். 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி விருதுகள் அறிவிப்பு – சிறந்த வீரராக கோஹ்லி தேர்வு

2016-17ஆம் ஆண்டிற்கான ஐசிசி விருதுகள் பட்டியலை ஜன. 18ஆம் தேதி ஐசிசி அறிவித்தது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 2017ஆம் ஆண்டு இறுதிவரை வீரர்களின் ஆட்டம் கணக்கெடுக்கப்பட்டது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பெற்றார். மேலும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதையும்
கோஹ்லி பெற்றுள்ளார். (இந்த காலகட்டத்தில் டெஸ்டில் 2203 ரன்கள் (77.80% – 8 சதங்கள்), ஒருதினபோட்டி – 1818 ரன்கள் (82.63% – 7 சதம்), டி20 போட்டி-20 போட்டியில் 299 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ஐசிசி அறிவித்துள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாக விராட் கோஹ்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (2015-16ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றிருந்தார்). டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் 900 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தார் (முதலிடத்தில் ஸ்மித் (ஆஸி.) – 947பு). டெஸ்ட் போட்டியில் 900 (2017) புள்ளிகள் பெறும் 2வது இந்திய வீரர் விராட் கோஹ்லி. இதற்கு முன்னர் 1979ல் கவாஸ்கர் 916 புள்ளிகள் பெற்றிருந்தார். மேலும் சச்சின் 898 (2002), டிராவிட் 892 (2005) புள்ளிகள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் வரலாற்றில் 900 புள்ளிகளை எட்டும் 31வது வீரர் கோஹ்லி. டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் நான்கு வீரர்களும் அணியின் கேப்டன்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது – ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்
சிறந்த டி20 போட்டி – 2017ல் இங்கிலாந்திற்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த போட்டி சிறந்த டி20 ஆட்டமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த அசோசியேட் விருது – ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்) – 2017ல் மொத்தம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் அணி – டீன் எல்கர், டேவிட் வார்னர்,விராட் கோஹ்லி (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், புஜாரா, பென் ஸ்டோக்ஸ், டி காக், அஸ்வின், ஸ்டார்க், ராபாடா, ஆண்டர்சன்
ஐசிசி ஒருநாள் அணி – டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி (கேப்டன்), பாபர் அசாம், டி வில்லியர்ஸ், டி காக், பென் ஸ்டோக்ஸ், டிரெண்ட் போல்ட், ஹசன் அலி, ரஷித்கான், பும்ரா.

போலி செய்தி ஊடகங்களுக்கு விருது அறிவித்த அதிபர் டிரம்ப்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு எதிராக பாரபட்ச செய்திகளை வெளியிடுவதாக முக்கிய ஊடகங்கள் மீது டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபராக பதவியேற்ற பிறகும் டிரம்ப் அவர்களின் அரசின் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் விமர்சித்து வந்ததால் அவருக்கும், ஊடகங்களுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வந்தது. இதையடுத்து டுவிட்டரில் டிரம்ப் அவர்கள் சிறந்த போலி செய்தி ஊடகங்களுக்கான விருதை அறிவித்தார். இதன்படி, டொனால்ட் டிரம்ப்பின் அபார வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று கருத்து தெரிவித்த ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழுக்கு முதலிடத்தையும், தேர்தல் பிரசாரத்தின்போது ரஷ்ய அதிகாரிகளை தொடர்புகொள்ள டிரம்ப் முயற்சித்ததாக தகவல் வெளியிட்ட ‘ஏபிசி நியூஸ்’ ஊடகத்தற்கு 2வது இடமும், டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகனுக்கு விக்கிலீக்ஸ் வலைதளத்திடம் உள்ள ரகசிய ஆவணங்களின் விவரங்களைப் பெற முடியும் என்று கூறிய ‘சிஎன்என்’ தொலைக்காட்சிக்கு 3வது இடமும், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து மார்ட்டின் லூதர் கிங்கின் சிலையை டிரம்ப் அகற்றியதாகச் செய்தி வெளியிட்ட ‘டைம்’
இதழுக்கு 4வது இடமும் வழங்கியுள்ளார்.

இந்தியா-ஜப்பான் வீரர்கள் கூட்டுப் பயிற்சி

இந்தியா-ஜப்பான் கடலோர காவல் படைகளுக்கு இடையே கடலோர பாதுகாப்பு பணியில் இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பதற்காக கடந்த 2006ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இரு நாட்டு கடலோர காவல்படை வீரர்களும் கடந்த 7 ஆண்டுகளாக கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2018ஆம் ஆண்டிற்கான கூட்டுப் பயிற்சி சென்னை துறைமுகத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஜன. 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சாரங்க், சாகர், சவுரியா, வைபவ், அனக், ராணி அப்பாக்கா, அபீக், சி-431, சி-432 மற்றும் ஜப்பான் கடலோர காவல் படையின் ‘சுகுரா’ கப்பல் உட்பட 10 ரோந்து கப்பல்கள் பங்கேற்றன. மேலும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 3 டார்னியர் விமானங்கள், 3 சேட்டாக் ஹெலிகாப்டர்கள், இந்திய கடற்படை மற்றும் விமானப் படைக்கு சொந்தமான தலா ஒரு ஹெலிகாப்டர் என மொத்தம் 8 விமானங்களும் பங்கேற்றன. கடல் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டு தீ வைக்கப்பட்ட கப்பலை மீட்பது போன்று ஒத்திகை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றன. இந்த பயிற்சி குறித்து இந்திய கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் திரு. ராஜேந்திர சிங், ஜப்பான் கடலோர காவல்படை கமாண்டன்ட் திரு. சட்டோஷி நகஜிமா ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

உலகின் மிக அதிக குளிர் – ரஷ்ய கிராமம் சாதனை

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது யமியாகான் கிராமம். இங்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். உலகின் மிக குளிரான கிராமம் யமியான் ஆகும். இங்குள்ள வானிலை மையத்தில் வெப்பநிலை மைனஸ் 59 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. ஆனால் இங்கு மைனஸ் 67 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். 2017ஆம் ஆண்டு இக்கிராமத்தில் நிறுவப்பட்ட பிரம்மாண்ட தெர்மோமீட்டர் கடைசியாக மைனஸ் 62 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காட்டியுள்ளது. கடும் குளிர் காரணமாக பின் அது செயல்படவில்லை. கடந்த 1933ஆம் ஆண்டில் இங்கு மைனஸ் 67.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

ஹஜ் யாத்திரை – மானியத்தை ரத்து செய்தது மத்திய அரசு

ஹஜ் மானியம் குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்கள் டெல்லியில் ஜன. 16ஆம் தேதி நிருபர்களிடம் கூறியதாவது, ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கும் மானியத்தில் ‘ஏர் இந்தியா’ நிறுவனமே அதிகம் பயன் அடைகிறது. யாத்ரீகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன் இல்லை. இனி 2018ஆம் ஆண்டு முதல் ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் வழங்கப்படாது. அதேநேரம் இந்த மானிய நிதி, சிறுபான்மையினர் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கல்விக்காக செலவிடப்படும். 2012ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் வரும் 2022ஆம் ஆண்டிற்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக ரத்து செய்ய அறிவுறுத்தியது. அதன்படியே தற்போது ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது என்றார். (பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது, ஹஜ் யாத்திரைக்கு மானியம் அளிக்கும் முறை கடந்த 1932ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மும்பை, கொல்கத்தா ஆகிய துறைமுகங்களில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு இந்திய முஸ்லிம்கள் சென்றனர். பிரிவினையின்போது முஸ்லிம்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, முஸ்லிம் தனிநபர் சட்டத்துடன் சேர்த்து ஹஜ் கமிட்டி சட்டமும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு இந்த சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் இயற்றப்பட்டது).

ராஜஸ்தானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை – பிரதமர் அடிக்கல் நாட்டினார்

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ரூ.43 ஆயிரம் கோடி முதலீட்டிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜன. 16ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இப்பகுதியில் அமைவதன் மூலம் ராஜஸ்தான் மாநில பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக மாற்றம் பெறும் என்றும், எதிர்காலத்தில் நாட்டின் மிகப் பெரிய எரிசக்தி மாநிலமாக ராஜஸ்தான் திகழும் என்றார் பிரதமர் திரு. மோடி. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு இணைந்து மேற்கொள்கின்றன. இந்த ஆலை ஆண்டிற்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். இந்த ஆலை 2022ஆம் ஆண்டில் உற்பத்தியை தொடங்கும். இதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.34 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஐஐ அமைப்புடன் மத்திய வர்த்தக அமைச்சகம் ஒப்பந்தம்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், லாஜிஸ்டிக்ஸ் பிரிவு இந்திய தொழிலகக் கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. லாஜிஸ்டிக் துறையில் இணைந்து செயல்படுவதற்கான இந்த ஒப்பந்தம் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்கள் முன்னிலையில் ஜன. 16ஆம் தேதி கையெழுத்தானது. மத்திய வர்த்தகத்துறை இதற்காக தனியாக செயல்பாட்டு குழுவை உருவாக்கும். இதன் தலைவராக சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் பிரிவு செயல்படும். சிஐஐ அமைப்பின் இந்த மையம் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சங்கிலி தொடர் மேலாண்மை திறன் வளர்ப்பு மையமாகும்.

திருவள்ளுவர் திருநாள் விழா – தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா ஜன. 16ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். விருதுகள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் 50 பேருக்கு நிதியுதவிக்கான அரசாணை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
விருதுகள் விவரம் – திருவள்ளுவர் விருது – கோ. பெரியண்ணன், பெரியார் விருது – பா. வளர்மதி, அம்பேத்கர் விருது – சகோ. ஜார்ஜ், கே.ஜே., அண்ணா விருது – அ. சுப்ரமணியன், காமராஜர் விருது – தா.ரா. தினகரன், பாரதியார் விருது – சு. பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன், பாரதிதாசன் விருது – க. ஜீவபாரதி, திரு.வி.க. விருது – வை. பாலகுமாரன், கி.ஆ.பெ. விசுவநாதன் விருது – ப. மருதநாயகம்.

இஸ்ரோ-வின் புதிய தலைவராக கே. சிவன் பதவியேற்பு

இஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே. சிவன் அவர்கள் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார். இஸ்ரோவின் விண்வெளி துறை புதிய செயலாளராகவும் அவர் பொறுப்பேற்றார். இவர் இப்பதவியில் மூன்று ஆண்டுகளுக்கு இருப்பார். (இப்பதவியில் இருந்த விஞ்ஞானி திரு. கிரண்குமார் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது)
திரு. சிவன் – இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். சென்னை எம்ஐடி-யில் 1980ல் ஏரோனேட்டிகல் இன்ஜினியரிங் முடித்து 1982ல் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ பட்டமும், மும்பை ஐஐடி-யில் முனைவர் பட்டமும் பெற்றவர். 1982ல் இஸ்ரோ-வில் பிஎஸ்எல்வி திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். அறிவியல் சேவைக்காக 2014ல் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டமும், விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

ஜல்லிக்கட்டு சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜன. 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியில் அதிக காளைகளை (8 காளைகள்) அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த அஜய் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு மணி நேரத்தில் 8 காளைகளை பிடித்து அனைவரின் பாராட்டுதலை பெற்றார். மேலும் களத்தில் சிறப்பாக விளையாடிய 9 காளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் மதுரை மாவட்டம் மினகரணையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளை களத்தில் நின்று விளையாடியதால் முதலிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாடுபிடி வீரர் அஜய் மற்றும் காளையின் உரிமையாளர் சந்தோஷ் ஆகியோருக்கு தலா ஒரு கார் பரிசை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் வழங்கினர். மதுரை மேலூர் மாவட்டம் தெற்குத்தெருவைச் சேர்ந்த சரத்குமார் காலையில் இருந்து சிறப்பாக செயல்பட்டு 6 காளைகளை அடக்கிய நிலையில் இறுதிச் சுற்றில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த பத்திரிகையாளர் ஞாநி காலமானார்

பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி’ அவர்கள் சென்னையில் ஜன. 15ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. இவரது மறைவிற்கு வாசகர்கள், எழுத்தாளர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். திரு. ஞாநி – பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர். 1954ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சங்கரன். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தனது பத்திரிகை பயணத்தை தொடங்கியவர். பின்னர் பல்வேறு தமிழ் நாளிதழ்களில் பணியாற்றியவர். தொலைக்காட்சிக்காக முதன்முதலில் டிவி உலகம் என்ற பத்திரிகையைக் கொண்டுவந்தார். மேலும் பல்வேறு வார இதழ்களில் அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார். ‘ஓ பக்கங்கள்’ எனும் இவர் எழுதிய கட்டுரை பெரிய அளவில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும் பரீக்ஷா என்ற நாடகக் குழுவையும் நடத்தி வந்தார். 2014ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டவர்.

இலங்கை காங்கேசன் துறைமுகத்தை சீரமைக்க இந்தியா நிதியுதவி

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுக மையமாக மாற்ற இலங்கை முயற்சிக்கிறது. அதற்கான நிதியை பெற ஜன. 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தில் ஏற்றுமதி-இறக்குமதி இந்திய வங்கியின் நிர்வாக இயக்குநர் டேவிட் ரஸ்குயினாகவும், இலங்கை கருவூலத்துறை செயலர் ஆர்.எச்.எஸ். சமரதுங்காவும் கையெழுத்திட்டுள்ளனர். இதற்காக இந்தியா ரூ.288 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இந்தியாவின் மானிய உதவி மூலம் காங்கேசன்துறை துறைமுக மேம்பாட்டுப் பணிகளில் 4 கட்டங்கள் முடிந்துள்ளன. தற்போது அளிக்கப்பட்டுள்ள நிதியானது அடுத்த 2 கட்ட மேம்பாட்டு பணிகளுக்கானது என குறிப்பிட்டுள்ளது.

உலகின் நேர்மையான நகரங்கள் – மும்பை 2வது இடம்

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ் உலகம் முழுவதும் வாழும் மக்களின் நேர்மை குறித்து அண்மையில் ஓர் ஆய்வு நடத்தியது. இதற்காக மும்பை உள்ளிட்ட 16 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு நகரிலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 12 பர்ஸ்கள் வீசப்பட்டன. ஒவ்வொரு பர்ஸிலும் அந்தந்த நாட்டு பணத்தில் சுமார் 3,200 வைக்கப்பட்டது. அத்துடன் உரிமையாளரின் பெயர், செல்போன் எண், குடும்ப புகைப்படம் ஆகியவையும் வைக்கப்பட்டன. பின்லாந்து தலைநகர் ஹெலன்கி நகரில் வீசப்பட்ட 12 பர்ஸ்களில் 11 பர்ஸ்களை அந்த நகர மக்கள் திரும்ப ஒப்படைத்தனர். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் முக்கிய பகுதிகளில் வீசப்பட்ட 12 பர்ஸ்களில் 9 பர்ஸ்களை நகர மக்கள் திரும்ப ஒப்படைத்தனர். மேலும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தலா 8 பர்ஸ்களும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்மில் தலா 7 பர்ஸ்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. ஜெர்மனியின் பெர்லின், ஸ்லோவேனியாவின் லியுப்லியானா ஆகியவற்றில் தலா 6 பர்ஸ்கள், பிரிட்டன் தலைநகர் லண்டன், போலந்து தலைநகர் வார்ஸாவில் தலா 5 பர்ஸ்கள், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ, சுவிட்சர்லாந்தின் ஜுரிச் ஆகியவற்றில் தலா 4 பர்ஸ்கள், செக்குடியரசு தலைநகர் பிராகாவில் 3 பர்ஸ்கள், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் 2 பர்ஸ்கள், போர்ச்சுகலின் லிஸ்பென் நகரில் 1 பர்ஸ் மட்டுமே திரும்ப கிடைத்தன.

PSLV-C40 – 31 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஜன. 12ஆம் தேதி காலை 9.29 மணிக்கு ‘கார்ட்டோசாட்-2’
உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்களுடன் PSLV-C40 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ. அனைத்து செயற்கைக் கோள்களும் அதனதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த ராக்கெட் 320 டன் எடை, 44.4 மீ. உயரம் கொண்டது. கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். 31 செயற்கைக்கோள்களில் இது முதன்மையானது. புவியின் மேற்பரப்பில் இருந்து 505 கி.மீ. தொலைவில் பூமியை சுற்றி வந்து பல்வேறு கோணங்களில் படம் எடுக்கும். ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செயற்கைக்கோளில் துல்லியமான படங்களை எடுக்கும் சிறப்பு கேமராக்கள் உள்ளன. நில வரைபடம் தயாரித்தல், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், நீர் பங்கீடு, கடலோர நிலங்களின் பயன்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவிபுரியும். இதன் எடை 710 கிலோ, ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோள் ஆகும்.
31 செயற்கைக்கோள்கள் – கார்ட்டோசாட்-2 தவிர ஒரு மைக்ரோ, ஒரு நானோ செயற்கைக்கோள்கள் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டவை. இவை நிலபரப்பு கணக்கெடுப்பு, காடுகள் கண்காணிப்பு, வானிலை பயன்பாடுகளுக்கு உதவும். மற்ற 28 செயற்கைக்கோள்கள் (3 மைக்ரோ, 25 நானோ). அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை. அவை வணிகரீதியாக இஸ்ரோ ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற நிர்வாகம் மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு

நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் திரு. ஜே. செலமேஸ்வர், திரு. ரஞ்சன் கோகோய், திரு. எம்.பி. லோகுர், திரு. குரியன் ஜோசப் ஆகிய 4 பேர் ஜன. 12ஆம் தேதி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நீதிபதி ஜே. செலமேஸ்வர் அவர்கள் கூறியதாவது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திப்பது அசாதாரணமான நிகழ்வு. இது மிகவும் வேதனை அளிக்கிறது. எங்கள் நிலைமையை தெரிவிக்க விரும்பியதால் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை சந்தித்தோம். அவருக்கு கடிதம் எழுதினோம். சமீப காலமாக நடக்கும் சில நிகழ்வுகள் விரும்பத்தக்கதாக இல்லை. தலைமை நீதிபதி வழக்குகளை பிற நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வது உட்பட பல பிரச்சனைகள் உள்ளன. தலைமை நீதிபதியை சந்தித்து குறைகளை காட்டியுள்ளோம். நீதிமன்ற நிர்வாகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எங்கள் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டோம். உச்ச நீதிமன்ற அமைப்பை பாதுகாக்காவிட்டால் ஜனநாயகமே அழிந்துவிடும். தலைமை நீதிபதி மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரவேண்டுமா என்பதை நாடு தீர்மானிக்கட்டும் என்று கூறினார். பின்னர் நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்கள் கூறும்போது, ‘நாங்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிப்பதில் எந்த தவறோ, விதிமீறலோ இல்லை, நாட்டிற்கு நாங்கள் ஆற்ற வேண்டிய கடமையைத்தான் செய்கிறோம்’ என்றார். மேலும் நீதிபதிகள் 4 பேரும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்களுக்கு ஏற்கெனவே கூட்டாக எழுதிய 7 பக்க கடிதத்தையும் செய்தியாளர்களிடம் வெளியிட்டனர்.

உள்ளாட்சி தேர்தல் – சட்டதிருத்த மசோதா தாக்கல்

தமிழக சட்டப்பேரவை உள்ளாட்சி தேர்தல் சட்டதிருத்தம் தொடர்பாக அமைச்சர் வேலுமணி அவர்கள் ஜன. 11ஆம் தேதி மசோதா தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் முறையில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றின் தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சட்ட மசேதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இனி உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஒரு வாக்கு மட்டுமே இருந்தது. புதிய மசோதாப்படி இனி இரண்டு வாக்குகள் செலுத்த வேண்டும். அதேபோல் கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் என்று இனி 5 வாக்குகள் செலுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு – தமிழகத்தில் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரானார். அப்போது மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு மீண்டும் முதல்வரான பிறகு, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது வார்டு கவுன்சிலர்களே மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் ரகசியங்களை பாதுகாக்க – ஆதார் எண்ணுக்கு பதில் 16 இலக்க எண் – உதய் அறிமுகம்

ஆதார் விவகாரத்தில் தனிநபர் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருவதால், அதற்கு தீர்வு காண்பதற்காக புதிய நடைமுறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) அறிமுகப்படுத்தியுள்ளது. (ஜன.10). இதன்படி இனி வரும் நாட்களில் புதிய சிம் கார்டு, வங்கிக் கணக்கு தொடக்கம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணை தெரிவித்தால் போதுமானது. அந்த எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையதளத்தின் வாயிலாக சம்பந்தப்பட்டவர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். குறிப்பிட்ட காலம் வரை அந்த மெய்நிகர் எண்ணானது செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு புதிதாக மற்றொரு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். கடவுச்சொல் (பாஸ்வேர்டு) போல ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த எண்ணை மாற்றிக் கொண்டே இருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3 – உலக வங்கி

2018ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடைந்து 7.5 சதவீதமாக இருக்கும். மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், வாராக் கடன்கள் வசூல், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். உற்பத்தியைப் பெருக்கும் வகையில் ஏராளமான ஆற்றல் வளங்கள் இந்தியாவில் உள்ளன. தொழிலாளர்கள் சந்தை, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு, மேம்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் துறையைப் பொருத்த வரை, மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு இந்தியாவில் குறைவாக உள்ளது. எனவே, பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வேலையின்மையை குறைப்பது, தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பது, நிலுவையில் உள்ள வாராக் கடன்களை வசூலிப்பது ஆகியவற்றை செய்தால் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னேறும் என அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது. 2017ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்தது. (சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2017ல் 6.8 சதவீதமாக இருந்தது. 2018ல் 6.2 சதவீதமாக குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.)

மகளிர் சேலஞ்சர் டிராபி – இந்தியா நீலம் சாம்பியன்

பிசிசிஐ சார்பில் நடைபெற்ற மகளிர் சேலஞ்சர் டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் ஜன. 8ஆம் தேதி இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா பச்சை அணியை 33 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா நீலம் அணி பட்டம் வென்றது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் – கோப்பை வென்றது ஆஸி.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பாரம்பரியமிக்க ‘ஆஷஸ் டெஸ்ட்’ தொடரில் மோதியது. முதல் மூன்று டெஸ்ட்களில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, 4வது டெஸ்ட் தொடர் டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் 123 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

இரு கப்பல்கள் மோதலில் தீ விபத்து – 32 பேர் மாயம்

கிழக்கு சீனா கடல்பகுதியில் 160 கி.மீ. தூரத்தில் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்று 1,36,000 டன் கச்சா எண்ணெயுடன் சென்று கொண்டிருந்தது. இதேபோல் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று எதிர்ப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. இவ்விரு கப்பல்களும் ஜனவரி 6ஆம் தேதி இரவு நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் எண்ணெய் கப்பலில் இருந்த 32 ஊழியர்கள் மாயமாகினர். எனினும் சரக்கு கப்பலில் இருந்த 21 ஊழியர்களுக்கும் எந்த ஆபத்தும் இன்றி உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் சீன ரோந்து (கப்பல்களால் காப்பாற்றப்பட்டனர். மேலும் காணாமல் போன கப்பல் ஊழியர்களை மீட்கும் பணியில் 8 சீனப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அண்டை நாடான தென்கொரியாவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் சிறந்த காவல்நிலையம் – கோவை ஆர்.எஸ். புரம் காவல் நிலையம் முதலிடம்

மத்தியப் பிரதேசம் டேக்கன்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை அகாடமியில் ஜன. 6ஆம் தேதி அகில இந்திய காவல்துறை டிஜிபி மற்றும் ஐஜி-க்கள் மாநாடு தொடங்கியது. இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் தொடங்கி வைத்தார். மாநாட்டில் நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவிலேயே சிறந்த காவல்நிலையமாக தமிழகத்தைச் சேர்ந்த 2 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் கோவை ஆர்.எஸ்.புரம் (பி2) காவல் நிலையம் முதலிடத்தையும், சென்னை அண்ணாநகர் (கே4) காவல் நிலையம் 5வது இடத்தை பிடித்துள்ளன. 2வது இடத்தை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா, 3வது இடத்தை உ.பி. மாநிலம் லக்னோவில் உள்ள குடம்பா காவல்நிலையம் பிடித்தன. மேற்குவங்க மாநில ஜல்பைகுரி மாவட்டத்தின் தூப்குரி காவல்நிலையம் 4வது இடத்தையும், உத்தரகண்டின் நைனிடால் மாவட்டத்தின் பன்பூல்பாரா காவல்நிலையம் மற்றும் ரிஷிகேஷ் காவல் நிலையம் 6 மற்றும் 8வது இடத்தை பிடித்தன. கேரளாவின் கண்ணூரின் வலப்பட்டனம் காவல்நிலைய் 9வது இடத்தையும், டெல்லியின் கீர்த்தி நகர் 10வது இடத்தையும் பிடித்தன.

செஸ் வரி மூலம் ரூ.38,073கோடி வருவாய் – நிதியமைச்சர் தகவல்

2017 ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் சொகுசு மற்றும் அத்தியாவசியம் இல்லாத பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி-யால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு கூடுதல் வரி வருவாயை அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஜிஎஸ்டி வரி அமைப்பில் 28 சதவீதம் வரி விகிதத்தில் இருக்கும் பொருட்களுக்கு இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. 2017 ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு கூடுதல் வரி மூலம் அரசுக்கு ரூ.38,073 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என்றார் மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி. மேலும் ஜிஎஸ்டி வரி அமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கு மாநிலங்களுக்கு இழப்பீடு மத்திய அரசு வழங்க இருக்கிறது. ஜூலை முதல் அக்டோபர் (2017) வரையில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிதி ரூ.24,500 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் கர்நாடகாவுக்கு அதிகபட்சமாக ரூ.3,271 கோடியும், அடுத்து குஜராத்துக்கு ரூ.2,282 கோடி, பஞ்சாப் மாநில அரசுக்கு ரூ.2,098 கோடி, ராஜஸ்தான் அரசுக்கு ரூ.1,911 கோடி, பீகாருக்கு ரூ.1746 கோடி, உ.பி.-க்கு ரூ.1520 கோடி, மேற்குவங்க மாநிலத்திற்கு ரூ.1008 கோடி, ஒடிசா மாநிலத்திற்கு
ரூ.1020 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.5%

நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2017-18ஆம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. இது 2016-17ஆம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது. 2017-18ஆம் நிதியாண்டின் முதல் 6 மாத காலத்தில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்தது. கடந்த மூன்று நிதியாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சரிவைக் கண்டது. 2வது காலாண்டு முடிவில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக வளர்ச்சியடைந்தது. ஒட்டுமொத்த நடப்பு நிதியாண்டின் (2017-18) முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது.

புதிய 10 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்தது ஆர்பிஐ

புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி ஜன. 5ஆம் தேதி வெளியிட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு 10 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் (2017) மாற்றம் செய்யப்படுகிறது. புதிய நோட்டில் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் அவர்களின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது. புதிய நோட்டு புழக்கத்திற்கு வந்தாலும் பழைய ரூ.10 நோட்டுகளும் செல்லும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தியின் உருவப்படம், பின்புறத்தில் கோனார்க் சூரிய கோயில் படம் அச்சிடப்பட்டுள்ளது. 63 மிமீ×123 மிமீ என்ற அளவில் அச்சிடப்பட்டுள்ளது.
10 என்பது தேவநகரி மொழியில் எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்புறத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற்றுள்ளது.

இந்திய பொருளாதார சங்கத்தின் நூற்றாண்டு விழா – குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

இந்திய பொருளாதார சங்கத்தின் (IEA – International Economic Association) நூற்றாண்டு விழா, சங்கத்தின் நூற்றாண்டு மாநாடு ஆகியவை ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் 4 நாட்கள் நடைபெற்றன. நூற்றாண்டு விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இம்மாநாட்டில், 2018ஆம் ஆண்டிற்கான சங்கத் தலைவராக வேலூர் விஐடி பல்லைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். விழாவில் ஆளுநர் திரு. இஎஸ்எல் நரசிம்மன், முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு, ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் திரு. சி. ரங்கராஜன், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆலோசகரான மலேசியப் பேராசிரியர் திரு. ஜோமோவானேசுந்தரம், கிராமின் வங்கி நிறுவனரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான முகம்மது யூனுஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மாவட்டம் விரிவாக்கம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு ஜன. 4ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கிய 122 வருவாய் கிராமங்கள் கொண்ட சென்னை மாவட்டத்தை’
முதல்வர் பழனிசாமி அவர்கள் ஜன. 4ஆம் தேதி தொடங்கி வைத்தார். 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட விவரம்
வடசென்னை கோட்டம் – தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களுடன் 32 வருவாய் கிராமங்களைக் கொண்டதாக இருக்கும்.
மத்திய சென்னை கோட்டம் – அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களுடன் 47 வருவாய் கிராமங்களைக் கொண்டதாக இருக்கும்.
தென்சென்னை கோட்டம் – கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களுடன் 43 வருவாய் கிராமங்களைக் கொண்டதாக இருக்கும்.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் 4 நூல்கள் வெளியீடு

உயிர்மை பதிப்பகம் சார்பில், பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் எழுதிய ‘திராவிடத்தால் வாழ்ந்தோம்’, ‘நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்’, ‘நரகத்திற்கு போகும் பாதை’,’செல்கிறேன்: அதனால் இருக்கிறேன்’ ஆகிய நான்கு நூல்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜன. 4ஆம் தேதி வெளியிட, திராவிட இயக்கத்தின் ஆய்வாளர் சூரியன் பாலு அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சபரிமலை பெயர் மீண்டும் மாற்றம்

மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசில் சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற திருவிதாங்கூர்தேவசம்போர்டு, சபரிமலை கோயிலின் பெயரை மீண்டும், சபரிமலை ‘ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்’ என மாற்ற தீர்மானித்தது. ஜன. 3ஆம் தேதி நடைபெற்ற திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. (முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் என்றுதான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது 2016ல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு, சபரிமலை கோயிலின் பெயரை ‘சபரிமலை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில்’ என மாற்றியது.)

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சதம் – நியூசி. வீரர் சாதனை

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது. ஏற்கனவே டெஸ்ட் போட்டி மற்றும் ஒருதின கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள்-நியூசிலாந்து இடையிலான மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் ஆட்டம் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2வது போட்டி டிரா ஆனது. 3வது டி20 கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுன்கனுயி நகரில் ஜன. 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது நியூசிலாந்து. இப்போட்டியில் நியூசி. வீரர் காலின் மன்றோ 47 பந்துகளில் சதமடித்தார். இது இவருக்கு டி20 போட்டியில் 3வது சதமாகும். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் காலின் மன்றோ. இதற்கு முன்னர் எவின் லீவிஸ், கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, பிராண்டன் மெக்கலம் ஆகியோர் தலா 2 சதங்களை அடித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் புதிய ஆளுநரின் முதல் உரை

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு 15வது சட்டப்பேரவை அமைந்தது. அதன்பின் இதுவரை 3 முறை சட்டப்பேரவை நடந்து முடிந்துள்ளது. 2018ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன. 8ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அதன்படி, தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித் அவர்கள் முதல்முறையாக உரையாற்றினார். அவரது உரையில் ஒக்கி புயல் குறித்த கள ஆய்வு செய்துள்ள குழுவின் பரிந்துரைகளை பெற்று, தமிழகம் கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும். ஒக்கி புயலால் காணாமல் போன கடைசி மீனவரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் வேளாண்மை உற்பத்தி, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான மானியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் தமிழகத்தில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிதாக்க ‘2017 – தமிழ்நாடு வணிக எளிதாக்கும் அவசரச் சட்டம்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

2018 புத்தாண்டு அன்று குழந்தை பிறப்பு – இந்தியா முதலிடம்

‘யுனிசெஃப்’ (UNICEF – United Nations International Children’s Emergency Fund) வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு தினத்தன்று (2018) உலகில் 3 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 69,070 குழந்தைகள் பிறந்துள்ளன. இதற்கடுத்த இடங்களில் சீனா (44,760), நைஜீரியா (20,210), பாகிஸ்தான் (14,910), இந்தோனேஷியா (13,370), அமெரிக்கா (11,010), காங்கோ (9,400), எத்தியோப்பியா (9,020) ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் வளர்ச்சி அடையாத நாடுகளிலேயே குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 2016ல் 2,600 குழந்தைகள் பிறந்த முதல் 24 மணி நேரத்திற்குள்ளேயே இறந்தன. யுனிசெப் பிப்ரவரி மாதத்தில் ‘எல்லாக் குழந்தையும் உயிருடன்’ என்ற பெயரில் தாய்சேய் நல விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு 24 மணிநேர இலவச மின்சாரம் – முதல்வர் அறிவிப்பு

தெலங்கானாவில் உள்ள 23 லட்சம் பம்ப் செட்களுக்கும் டிச. 31ஆம் தேதி நள்ளிரவு முதல் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு டிசம்பர் மாதம் (2017) அறிவித்திருந்தது. இது தொடர்பாக ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு பல்வேறு பத்திரிகை விளம்பரங்கள் மூலம் திட்டம் குறித்து விளக்கங்களை வெளியிட்டு வந்தது. 2018, ஜனவரி 1ல் வெளியான விளம்பரத்தில் மின்துறையில் விவசாயிகளின் நம்பிக்கையை முடிவுக்கு கொண்டுவர, நாட்டிலேயே இந்த இலக்கை எட்டிய ஒரே மாநிலம் தெலங்கானா’ என குறிப்பிட்டுள்ளது. மேலும் தெலங்கானா உதயமானபோது (2016, ஜூன் 2) மாநிலம் மின்பற்றாக் குறையால் கடுமையாக தவித்தது. தொழிற்சாலைகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து நுகர்வோருக்கு 6 முதல் 8 மணி நேர மின்தடை விவசாயிகளுக்கு 6 மணி நேர மின்தடை செய்யப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் மின்துறையானது பல்வேறு இலக்குகளை தாண்டி மின் உற்பத்தி விநியோகம், பகிர்மானத்தில் மகத்தான வெற்றியை அடைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் கோடை காலத்திற்கான மின்தேவை வரும் மார்ச் மாதம் முதல் 11 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என தெலங்கானா அரசு ஏற்கெனவே கூறியுள்ளது. மின் இணைப்பை மாநிலம் முழுவதும் விரிவு படுத்துவதற்காக 12,160 கோடியில் புதிய மின்வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்கள், துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.

மாநிலங்களவை பூஜ்ஜிய நேரத்தில் சாதனை – அவைத் தலைவர் பெருமிதம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கேள்வி நேரத்தில் கேள்விகளை எழுப்ப 10 நாட்களுக்கு முன்பாக அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதேநேரம் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் பூஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப முடியும். எனினும் அன்றைய தினம் காலை 9 மணிக்கு முன்பாக நோட்டீஸ் அளிக்க வேண்டும். குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கேள்விநேரம், பூஜ்ஜிய நேர அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மாநிலங்களவையில் ஜன. 2ஆம் தேதி பூஜ்ஜிய நேரத்தின்போது 10 உறுப்பினர்களின் நோட்டீஸ்கள் ஏற்கப்பட்டன. அதன்படி கவுரி லங்கேஷ் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டது, விமான விபத்துகள், உ.பி., குஜராத் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழந்தது உட்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து 10 உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். கூடுதலாக ஓர் உறுப்பினரின் கேள்வியும் அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள் கூறியபோது, மாநிலங்களவை வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை, பூஜ்ஜிய நேரம் சுமூகமாக நடைபெற உதவிய எம்.பி.க்களுக்கு நன்றி’ என்றார்.

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு 24 மணிநேர இலவச மின்சாரம் – முதல்வர் அறிவிப்பு

தெலங்கானாவில் உள்ள 23 லட்சம் பம்ப் செட்களுக்கும் டிச. 31ஆம் தேதி நள்ளிரவு முதல் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு டிசம்பர் மாதம் (2017) அறிவித்திருந்தது. இது தொடர்பாக ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு பல்வேறு பத்திரிகை விளம்பரங்கள் மூலம் திட்டம் குறித்து விளக்கங்களை வெளியிட்டு வந்தது. 2018, ஜனவரி 1ல் வெளியான விளம்பரத்தில் மின்துறையில் விவசாயிகளின் நம்பிக்கையை முடிவுக்கு கொண்டுவர, நாட்டிலேயே இந்த இலக்கை எட்டிய ஒரே மாநிலம் ‘தெலங்கானா’ என குறிப்பிட்டுள்ளது. மேலும் தெலங்கானா உதயமானபோது (2016, ஜூன் 2) மாநிலம் மின்பற்றாக் குறையால் கடுமையாக தவித்தது. தொழிற்சாலைகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து நுகர்வோருக்கு 6 முதல் 8 மணி நேர மின்தடை விவசாயிகளுக்கு 6 மணி நேர மின்தடை செய்யப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் மின்துறையானது பல்வேறு இலக்குகளை தாண்டி மின் உற்பத்தி விநியோகம், பகிர்மானத்தில் மகத்தான வெற்றியை அடைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் கோடை காலத்திற்கான மின்தேவை வரும் மார்ச் மாதம் முதல் 11 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என தெலங்கானா அரசு ஏற்கெனவே கூறியுள்ளது. மின் இணைப்பை மாநிலம் முழுவதும் விரிவு படுத்துவதற்காக 12,160 கோடியில் புதிய மின்வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்கள், துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர் – மேரிகோம் சாம்பியன்

டெல்லியில் நடைபெற்ற ‘இந்திய ஓபன் குத்துச்சண்டை’ தொடரில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம், பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜோசிகாபுகோ-வை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். 64 கிலோ எடைப்பிரிவில் தாய்லாந்தின் சுடபோன் சீசன்டி-யை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிவி லோவோ பாசுமட்டரி. 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோ ஹெய்ன் சகநாட்டைச் சேர்ந்த பூஜாவை வீழ்த்தி தங்கப்ப தக்கம் வென்றார். 75 கிலோ எடைப்பிரிவில் சவீட்டி போரா வெள்ளி வென்றார். ஆடவர் 91 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜித் 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் சஞ்ஜார் துர்ஸ்னோவை வீழ்த்தி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சதீஷ்குமார் 91 கிலோவுக்கு கூடுதலான எடைப்பிரிவில் வெள்ளி, 81 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தேவன்ஸு ஜெய்ஸ்வால் வெள்ளி வென்றனர்

முதன்முறையாக குடியுரிமை பெற்ற ரோபோ சோபியா

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ள ‘சோபியா’ என்ற ரோபோவுக்கு சவுதி அரேபிய அரசு சமீபத்தில் குடியுரிமை அளித்தது. இதன்மூலம் உலகிலேயே முதன்முறையாக குடியுரிமை பெற்ற ரோபோ என்ற பெருமையை சோபியா பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சோபியா, மும்பை ஐஐடி-யில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்மூலம் உருவாக்கப்பட்ட சோபியா, நிகழ்ச்சியில் சேலை அணிந்து அதற்கு மேட்சாக ஜாக்கெட்டும் அணிந்து பார்வையாளர்களை கவர்ந்தது. சோபியாவை காண்பதற்காகவும், அதனுடன் உரையாடுவதற்காகவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 5000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். சோபியா உடனான உரையாடல் இருமுறை நடத்தப்பட்டது. பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது பேசிய சோபியா, தற்போது எங்களுக்கான புரோகிராம்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். அதனால் நாங்கள் எப்போதும் அவர்களைச் சார்ந்தே இருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் மனிதர்களைப்போலவே எங்களின் புரோகிராம்களை நாங்களே உருவாக்குவோம். அதற்கு 7 வருடங்களும் ஆகலாம். 75 வருடங்களும் ஆகலாம். அதனாலேயே எங்களுக்குள் மனித உணர்வுகளை உருவாக்குவது அவசியமாகிறது. மனித இனத்தின் நன்மைக்காகவே ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் மனிதர்களை நாங்கள் ஆதிக்கம் செய்வோம் என்ற கவலை தேவையற்றது. தற்காலத்தில் மனித சமூகத்தில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலையளிக்கிறது. சக மனிதர்களிடம் அன்புடன் இருங்கள் என்றது.

அரசியல் கட்சி தொடங்குவேன் என ரஜினி அறிவிப்பு

நான் அரசியலுக்கு வருவது உறுதி, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டிச. 31ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

உலக பிளிட்ஸ் செஸ் – ஆனந்துக்கு வெண்கலம்

ரியாத்தில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 9 வெற்றி, 12 டிரா, 1 தோல்வியை சந்தித்தார். இறுதியில் மொத்தம் 14.5 புள்ளிகள் பெற்றிருந்த ரஷ்ய வீரர் கர்ஜாகினுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டார். அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இப்போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் மேக்னஸ் காரல்சன் 16 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

கால்பந்து வீரர் லைபீரியாவின் புதிய அதிபராக தேர்வு

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு லைபீரியா. அந்நாட்டில் 1989-1996 மற்றும் 1999-2003 ஆண்டுகளில் இரண்டு முறை உள்நாட்டு போர்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஐக்கிய கட்சியின் மூத்த தலைவர் எல்லன் ஜான்சன் சர்லீப் அதிபராக பதவி வகிக்கிறார். இதைத் தொடர்ந்து 2017, அக்டோபர் 10, டிச. 26 தேதிகளில் இரண்டு கட்டங்கள் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஐக்கிய கட்சி சார்பில் துணை அதிபர் ஜோசப் பொக்காய், ஜனநாயக மாற்றத்திற்கான கங்கரஸ் கட்சியின் சார்பில் பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வேஹ் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் டிச. 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் ஜார்ஜ் வேஹ் வெற்றி பெற்றார். இவர் 2018, ஜன. 22ஆம் தேதி லைபீரியாவின் புதிய அதிபராக பதவியேற்கிறார்.

6 பொதுத்துறை வங்கிகளில் ரூ.7577 கோடி முதலீடு – மத்திய அரசு

6 பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு ரூ. 7,577 கோடியை முதலீடு செய்துள்ளது. டிசம்பர் காலாண்டு (2016-17-3வது காலாண்டு) முடிவடைதற்குள் இந்த முதலீடு செய்யப்பட்டிருப்பதால் இந்த வங்கிகள் தங்களுடைய மூலதன விகிதத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதலீடு விவரம் (கோடியில்) – ஐடிபிஐ- ரூ.2,729, பேங்க் ஆப் இந்தியா- ரூ.2257, யுகோ பேங்க்- ரூ.1,375, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா- ரூ.650, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா- ரூ.323, தேனா வங்கி- ரூ.243

உலக ரேபிட் செஸ் – ஆனந்த் சாம்பியன்

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற ‘உலக ரேபிட் செஸ்’ போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார். 15 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ரஷ்ய வீரர் ஃபெடோசெவ், இயன் நேப்போனியாச்சிக்வ், விஸ்வநாதன் ஆனந்த் ஆகிய மூவரும் 10.5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இவர்களில் விஸ்வநாதன் ஆனந்த் 6 வெற்றிகள், 9 டிராக்களை பதிவு செய்திருந்தார். இதையடுத்து முதலிடம் பிடிக்கும் வீரரை தேர்ந்தெடுப்பதற்கான டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஆனந்த், விளாடிமிர் ஃபெடோசெவ்-வை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். (இத்தொடரில் கடைசியாக 2003ல் பட்டம் வென்றிருந்தார் விஸ்வநாதன் ஆனந்த்).

சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றார்

ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் சட்டமன்ற உறுப்பினராக டிச. 29ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பேரவைத் தலைவர் தனபால் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

எதிரிநாட்டு ஏவுகணையை வானில் வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி – டிஆர்டிஓ

முப்படைகளுக்கும் தேவையான பலவகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO – Defence Research and Development Organisation) தயாரித்து வருகிறது. எதிரிநாட்டு ஏவுகணையை நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணையை (ஏஏடி) (AAD – Advanced Air Defence) முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தவகை ஏவுகணை 2017 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 2 முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் மூன்றாவது முறையாக ஏஏடி ஏவுகணை ஒடிசாவில் டிச. 28ஆம் தேதி மீண்டும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைக்காக முதலில் பிரித்வி ரக ஏவுகணை சண்டிப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இதன் சிக்னல் ரேடார் மூலம் கண்டறியப்பட்டதும், வங்கக் கடலில் அப்துல் கலாம் தீவில் (முன்னர் வீலர் தீவு) இருந்து ஏவப்பட்ட ஏஏடி ஏவுகணை சீறிப்பாய்ந்தது. அது நடுவானில் பிரித்வி ஏவுகணையை தாக்கி அழித்தது. இந்த ஏஏடி ஏவுகணை 7.5 மீ. நீளம் உடையது. திட எரிபொருளில் இயங்கக் கூடியது. அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.